Tuesday, January 11, 2011

செந்தமிழன் சீமானை கொலை செய்ய திட்டம்?

சீமான் அவர்களை கொலை செய்வதற்கான திட்டங்கள் நடந்து கொன்னு இருக்கின்றன என சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் தேர்தலை முன்னிட்டு சீமான் அவர்களை கொலை செய்து  விட்டு எதிர்க்கட்சிகளிடம் பழியை போடவும் திட்டம் போடப்பட்டிருக்கின்றதாகவும் வதந்திகள் வெளிவருகின்றன.
சீமான் அவர்கள் சிறையில் இருந்து வந்ததும் அவரை கொலை செய்வதாக போட்ட திட்டம், ஆனால் அதற்கான சந்தர்ப்பம் சரியாக அமையாததால், இப்போது அதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளதால் இந்த திட்டத்தை நிறைவேறுவதற்கு வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
இத்திட்டத்தை, இலங்கையில் இருக்கும் இரண்டு ஆயுத குழுக்களால் நிறைவேற்ற உள்ளன.
எமக்கு கிடைத்த தகவலின் படி ஈ.பி.டி.பி. மற்றும் ஈ.ன்.டி.எல்.எப் இந்த திட்டத்தை செய்வதற்கு இலங்கை அரசாங்க அதிகாரிகளின் தலைமையிலே நடக்க இருக்கின்றன, இதற்காக இந்திய தமிழ்நாட்டுக்குள்  அவர்கள் வந்துள்ளனர் என்று நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளன,
இதற்காக இந்திய அரசியல் கட்சி ஒன்றும் உடந்தையாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளன. தாக்குதல் திட்டங்களும் தெரிய வந்துள்ளன, கைக் குண்டு தாக்குதல் அல்லது கண்ணி வெடி தாக்குதல் மூலம் இவை நடக்க இருக்கின்றன.
இவை தவிர வேறு திட்டங்களும் இருக்கலாம், ஆனால் வேறு திட்டங்கள் மூலம் தாக்குதல் நடக்குமா என்பதற்கான தகவல் எமக்கு கிடைக்கவில்லை. இவை அனைத்தும் இந்திய தேர்தலுக்கு முன்பு நடத்த இருகின்றன.
இதனால் சீமான் அவர்கள் தாம் பயணம் செய்யும் பாதைகளை இரகசியமாக வைத்து கொள்வது, ஒடுக்கமான இடங்களில் மேடைகளில் பேசுவதும் ஆபத்தனவையாகும். என அப்பரப்புரை செய்தி தெரிவித்துள்ளது.
சீமானை எதற்காக இவ்வாறு அச்சுறுத்துகின்றனர் என நோக்கினால், சீமான் மேசைப்பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழ் தேசியத்தைப் பற்றியும், தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி பேசுவதையும், அவரின் பேச்சைக் கேட்க அலையென திரளும் மக்களை அச்சுறுத்துவதற்குமோ என சிந்திக்க தோன்றுகின்றது.

No comments:

Post a Comment

ebook