Monday, April 4, 2011

வாக்கு கேட்க காங்கிரசுக்கு என்ன தகுதி இருக்கிறது? சீமான்

இலங்கையிலே ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்துவிட்டு, தமிழர்களிடம் வாக்கு கேட்டுவர காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது? என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டைரக்டருமான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலுவுக்கு எதிராக, மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது சீமான் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும், அவர்களை தோற்க வைக்க வேண்டும் என்பதற்காக களத்தில் நிற்கிறோம். காங்கிரஸ் கட்சிகாரர்களும் அதே பணியில் உள்ளனர். ஏனென்றால், போட்டியிடும் 63 தொகுதிகளில், 40 தொகுதியில் போட்டி வேட்பாளரை நிறுத்தியுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 4 இடமாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. அதுவும் இங்கு கிடைக்கப்போவதில்லை. நாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக போராட வந்த அரசியல்வாதிகள் அல்ல.
இலங்கையிலே ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்துவிட்டு, தமிழர்களிடம் வாக்கு கேட்டுவர காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது?
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி ஏன் தோற்றது என்று ஊடகங்கள் ஆராயும்போது, ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த துரோகத்திற்காகத்தான் தோல்வி கிடைத்தது என்பது தெரியவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

ebook