Tuesday, April 5, 2011

காங்கிரசுக்கு எதிரான யுத்தம் ஏன்? சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டைரக்டருமான சீமான், தமிழகம் முழுவதும் 63 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தி பேசிவருகிறார்.
சென்னை வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமாரை ஆதரித்து சீமான் பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் நிற்கும்போது, நாம் மட்டும் ஏன் காங்கிரசுக்கு எதிரான யுத்தத்தில் நிற்கிறோம். காரணம் இன்றைக்கு தமிழக மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர். தமிழக
மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை அரசுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி துணைபோகிறது.
இந்திய கடலோர காவல் படையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் நாதியற்றவர்களாக ஆக்கப்பட்டு உள்ளனர். ஆகவே, தமிழக மீனவர்களை கொன்று குவிக்கிற இலங்கை அரசுக்கு துணை போகிற காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடியுங்கள் என்றார்.

No comments:

Post a Comment

ebook