உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியைப் பார்வையிடச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் அவமானப்படுத்தப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகக்கிண்ண கிரிக்கட்டின் இறுதிப்போட்டியைக் கண்டுகளிக்கச்சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு குறைந்த பட்சம் இராஜதந்திர மரியாதை கூட வழங்கப்படவில்லை. அத்துடன் அவரை வரவேற்க விமானநி்லையத்துக்கு எந்தவொரு முக்கியஸ்தரும் வருகை தரவுமில்லை.
ஆனால் ஜனாதிபதி புறப்பட முன்னர் அவரை வரவேற்க இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் விமான நிலையத்துக்கு வருகை தருவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இலங்கையின் சகல ஊடகங்களுக்கும் அறிவித்திருந்தது.
அத்துடன் விளையாட்டரங்கில் வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினால் இந்தியக் கிரிக்கட் வீரர்கள் ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும் அப்படி எதுவும் நடக்காதது மாத்திரமன்றி, ஜனாதிபதியுடன் அமர்ந்து கிரிக்கட் போட்டிகளை பார்வையிட இந்தியப் பிரதமரும் ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாக இராஜதந்திர ரீதியில் ஜனாதிபதி இந்தியாவினால் அவமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

No comments:
Post a Comment