ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை
ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை
April 16th, 2011 ஐரோப்பிய செய்தியாளர்ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் நாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ள நிலையில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை ஈழம் ஈ நியூஸ் சுருக்கமாக இங்கு தருகின்றது.
ஈழம் ஈ நியூஸ் இன் அரசியல் பிரிவு ஊடகவியலாளர்களினால் சுருக்கமான தமிழாக்கம் செய்யப்பட்;டுள்ள 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் மொழிபெயர்ப்புக்கு உதவிய ஊடகவியலார்களளுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை:
சிறீலங்காவில் இடம்பெற்றபோரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் குழு மேற்கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து சிறீலங்காவில் பெருமளவான போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் 2008 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நாம் அதிகமாக ஆராய்ந்துள்ளோம்.
சிறீலங்காவில் இடம்பெற்றபோரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் குழு மேற்கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து சிறீலங்காவில் பெருமளவான போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் 2008 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நாம் அதிகமாக ஆராய்ந்துள்ளோம்.
வன்னியில் 330,000 மக்கள் போரில் சிக்கியிருந்தனர். அவர்களில் பலர் சிறீலங்கா படையினரின் எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளும் மக்களை கேடையமாக பயன்படுத்தினர். போரில் நடைபெறும் சம்பவங்கள் வெளியில் தெரியவருவதை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு ஊடகவியலாளர்களையும், ஏனைய பணியாளர்களையும் மிரட்டிவந்துள்ளது. வெள்ளைவான் கடத்தல் மூலமும் மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.
மூன்று பாதுகாப்பு வலையங்களை அறிவித்த சிறீலங்கா அரசு அதன் மீது செறிவான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை படுகொலை செய்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும், அவர்கள் அதனை மீறியுள்ளனர்.
ஐ.நா அலுவலகம் மீதும், வைத்தியசாலைகள் மீதும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உணவு விநியோக நிலையம் மீதும் சிறீலங்கா அரசு எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல்களினாலேயே பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.நா அலுவலகம் மீதும், வைத்தியசாலைகள் மீதும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உணவு விநியோக நிலையம் மீதும் சிறீலங்கா அரசு எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல்களினாலேயே பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைகள் என தெரிந்திருந்தும் சிறீலங்கா படையினர் அதன் மீது மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகங்களையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு தடுத்துள்ளது.
வன்னியில் இருந்த மக்கள் தொகையையும் அது குறைத்து கூறியிருந்தது. போரின் பின்னரும் மக்களை தடுப்புக்காவலில் வைத்திருந்த சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் அவர்களை பிரித்து பலரை படுகொலை செய்ததுடன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளது. பெருமளவானோர் காணாமல்போயுள்ளனர். பொதுமக்கள் மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.
சிறிய பகுதிக்குள் பெருமளவான மக்களை அடைத்து அனைத்துலகத்தின் விதிகளை அரசு மீறியுள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்ட பலர் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து பிரிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
போரின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான வன்முறைகள்:
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டவை
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டவை
• எறிகணைத் தாக்குதல்கள் மூலம் பெருமளவான பொதுமக்களை படுகொலை செய்தது.
• வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை.
• மனிதாபிமான உதவிகளை தடுத்தமை.
• போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை.
• போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான வன்முறைகள், ஊடகத்துறை மீதான வன்முறைகள்.
விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை:
• மக்களை கேடையமாக பயன்படுத்தியமை.
• வெளியேற முனைந்த மக்களை படுகொலை செய்தமை.
• பொதுமக்களின் பிரதேசத்தில் படை உபகரணங்களை வைத்திருந்தமை.
• பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தது.
• பலவந்தமாக மக்களை பணியில் அமர்த்தியது.
• தற்கொலை தாக்குதல்களில் பொதுமக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
• வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை.
• மனிதாபிமான உதவிகளை தடுத்தமை.
• போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை.
• போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான வன்முறைகள், ஊடகத்துறை மீதான வன்முறைகள்.
விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை:
• மக்களை கேடையமாக பயன்படுத்தியமை.
• வெளியேற முனைந்த மக்களை படுகொலை செய்தமை.
• பொதுமக்களின் பிரதேசத்தில் படை உபகரணங்களை வைத்திருந்தமை.
• பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தது.
• பலவந்தமாக மக்களை பணியில் அமர்த்தியது.
• தற்கொலை தாக்குதல்களில் பொதுமக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
எனவே இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அனைத்துலக விதிகளின் மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா படை அதிகாரிகள், படை சிப்பாய்கள், சிறீலங்கா அரச அதிகாரிகள், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் முன் பெருமவளாக மக்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆனால் இந்த குழு அனைத்துலகத்தின் தராதரத்தை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தவில்லை.
சிறீலங்காவில் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகள்:
• விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் அங்கு தீர்க்கப்படவில்லை.
• அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளானதே இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணம்.
• போர்க்கால நடவடிக்கைகள் அங்கு தொடர்கின்றன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன தொடர்கின்றன. இராணுவமயப்படுத்தல்களும், துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவில்லை.
• ஊடகங்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றது.
பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு
இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள்;
சிறீலங்கா அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாம் பரிந்துரை செய்கிறோம்.
பரிந்துரை -1: விசாரணைகள்
நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும்.
சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும்.
இந்த குழு பின்வரும் செயற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்:
• சிறீலங்கா அரசின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து, செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
• நீதியான சுயாதீன விசாரணைகளையும் அது மேற்கொள்ள வேண்டும்.
• ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்கவேண்டும்.
பரிந்துரை -2: உடனடியான சிறப்பு நடவடிக்கைகள்
• சிறீலங்கா அரசின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து, செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
• நீதியான சுயாதீன விசாரணைகளையும் அது மேற்கொள்ள வேண்டும்.
• ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்கவேண்டும்.
பரிந்துரை -2: உடனடியான சிறப்பு நடவடிக்கைகள்
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
1. சிறீலங்கா அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.
4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.
5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.
8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.
2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.
4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.
5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.
8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.
தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
• தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்;.
• அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.
• நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
• குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
• சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
• அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.
• நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
• குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
• சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
பரிந்துரை -3: நீண்டகால சிறப்பு விசாரணை நடவடிக்கைகள்
போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
போர் உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
1. பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பிரச்சனைகளை சிறீலங்கா அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.
3. இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.
3. இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பரிந்துரை -4: ஐக்கிய நாடுகள் சபை
வன்னியில் இடம்பெற்றபோரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.
வன்னியில் இடம்பெற்றபோரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.
1. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும்.
2. மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
2. மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
ஈழத்தமிழரின் பிரச்சனையில் திமுக மற்றும் அதிமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன?- அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழக சட்டசபை தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளார்கள்.
ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலிருந்து, திரைப்படத் துறையினரின் நகைச்சுவையான கருத்துக்களும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது.தேர்தல் களத்தில் நிற்கும் ஒருவரிடத்திலிருந்தும் ஈழத்தமிழரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் வெளிவரவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறும் சட்டசபை தேர்தலென்றாலென்ன, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலென்ன ஈழத்தமிழரின் விவகாரம் தமிழகத்தில் முக்கிய இடத்தை பெற்று வந்துள்ளது.
மே 2009-இல் முடிந்த நான்காம் கட்ட ஈழப்போருக்கு பின்னர் சில மாதங்கள் ஈழத்தமிழர் விடயம் பெரிதாக தமிழகத்தில் பேசப்பட்டு வந்துள்ளது. அந்நிலை இப்பொழுது இல்லாமல் போய்விட்டது.
திமுகவினால் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதி ஈழத்தமிழர்கள் சமாதானத்துடனும் கண்ணியத்துடனும் வாழும் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியதுடன் நின்றுவிட்டது.
அதிமுகவினால் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையைப் பற்றி ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. அகதிகளாக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் தமிழகத்தில் வாழ்வதற்கு அதிமுக ஆட்சியைக் கைப்பற்றினால் நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகிறது.
அதிமுகவின் ஈழத்தமிழர்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. 1991-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை படாதுபாடு படுத்தியது.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு வீடுகளை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்று தமிழக மக்களை கேட்டதுடன், சிங்கள அரசு எப்படி அதன் பாதுகாப்புப் படையினரிடம் தமிழர்களை வதைக்க சட்டங்களை ஏவிவிட்டதோ அதைப்போலவேதான் ஜெயலலிதாவும் காவல்துறையினரிடம் அதிகாரங்களை வழங்கி ஈழத்தமிழர்களை வதைத்தார்கள்.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றத்தையும் பல காலங்களாகக் காண முடியவில்லை.
நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரம் அடைந்திருந்த வேளையில் மட்டும் தமிழக மக்களின் ஏகோபித்த ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தைப் பார்த்து தானும் ஏதோ ஈழத்தமிழர் மீது அதீத பாசம் கொண்டவர் போல சில அறிக்கைகளை வெளியிட்டார்.
விடுதலைப்புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு என்று 1991-ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ந்தும் கூறிவருகிறார். அத்துடன் பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை எனவும், பிரிவினைவாதம் பேசினாலே அதிமுக சும்மா இருக்காது என்று கூறுகிறது அதிமுகவின் தேர்தல் விஞ்ஞாபனம்.
ஐக்கிய நாடுகள் சபையே பயங்கரவாதம் என்றால் என்ன என்று அர்த்தம் தெரியாமல் அலையும்போது ஜெயலலிதா போன்றவர்கள் கூறும் அர்த்தங்கள் மக்களை ஏமாற்றவேதான் என்பது உண்மை. எது எப்படியாயினும், தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் ஈழத்தமிழரின் விடயத்தில் கடுகளவேனும் அக்கறை கொள்ளவில்லை.
இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன?
அனைவருமே குழம்பிய தண்ணீருக்குள் மீன் பிடிப்பவர்களே. அதிகமான மக்கள் எதை நினைக்கிறார்களோ அவர்களின் வாக்குகளை தமதாக்க வேண்டும் என்கிற மனப்பாங்குடன் களம் இறங்குபவர்களே அரசியல்வாதிகள். தமிழக அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைக்கு தீர்வு வந்துவிடுமென்றோ அல்லது திமுக ஆட்சிப்பீடம் மறுபடியும் ஏறினால் ஈழத்தமிழர்கள் அவர்களின் தாயகத்தில் கண்ணியத்துடன் வாழ இந்திய மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பதென்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமே.
திமுக தொடங்கிய பின், 1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய கலைஞர், இதுவரை 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஐந்து முறை தமிழகத்தையே ஆண்டாலும், சொந்த தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கலைஞரின் அரசியல் வாழ்வில் மக்களுக்கு செய்ததை விட தனக்கும் தனது குடும்பத்திற்கும் செய்ததே அதிகம். பொதுப் பிரச்சனைகள் என்றால் ஆரப்பாட்டங்கள் செய்வதும், பேருந்துகளை உடைப்பதும், புகையிரதப் போக்குவரத்தை நிறுத்தும் போராட்டங்களை செய்வதும், உண்ணாவிரதமிருப்பதும் மற்றும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டங்களை செய்வதுமாகவேதான் மக்களின் ஆதரவை இன்றுவரை கலைஞர் நிலைநிறுத்தியுள்ளாரே தவிர மக்களுக்கென்று விரல்விட்டு எண்ணக்கூடிய காரியங்களைத் தவிர அனைத்துமே அவர் குடும்பம் சார்ந்ததாகவே இருந்துள்ளது.
முதன் முதலில் 1957-ஆம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்ட கலைஞர், 8,296 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1962-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் போட்டியிட்டு, 1,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1967-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்டு, 20,482 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1971-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்டு, 12,511 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1977-ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்டு, 16,438 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1980-ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்ட இவர், 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1989-ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்டு, 31,991 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1991-ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்டு, 890 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1996-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 35,784 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2001-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இவர், 4,834 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2006-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 8,526 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இப்படியாக 11 தடவைகள் போட்டியிட்டு வென்றதுடன், ஐந்து தடவைகள் முதல்வராகவும் இருந்துள்ளார் கலைஞர்;.
கலைஞரை எப்படியேனும் வென்றுவிட வேண்டுமென்று கங்கணம் கட்டி செயற்படும் ஜெயலலிதாவும், சிறீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா இதுவரை ஐந்து தேர்தல்களை சந்தித்துள்ளார். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தவிர, நான்கு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
இவரும் மாபெரும் ஊழல்களைச் செய்து மாபெரும் “மகா ஊழல் ராணி" என்கிற பட்டத்தை பெற்றவர்தான். தமிழக மக்கள் இவைகளையெல்லாம் மறந்துவிட்டார்கள்.
ஏதோ சிலவற்றை இலவசமாகக் கொடுப்பதாக வாக்குறுதியளித்துவிட்டாலே போதும் அவர்களின் பின்னால் சென்றுவிடுவார்கள் தமிழக மக்கள்.
முதன் முதலாக ஜெயலலிதா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 1989-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈரோடு மாவட்டம், காங்கயம் தொகுதியில், 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சுகவனம் 9,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில், 2002-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
குறித்த இரு பிரதான கட்சிகளையும் தலைமைப்படுத்தும் தலைவர்கள் தொடர்ந்தும் வென்றுகொண்டே வருகிறார்கள். நடந்த சம்பவங்களை மூடி மறைப்பதும், மக்களை மென்மேலும் வதைப்பதுமே இவர்களின் நோக்கமாக இருந்து வந்துள்ளது.
எப்ப மக்கள் தெளிவடைகிறார்களோ அப்போது தமது அரசியலுக்கு ஆப்பு விழுந்துவிடும் என்று கதிகலங்கியோ என்னவோ மக்களை முட்டாள்களாகவேதான் வைத்திருக்க இவர்கள் விரும்புகிறார்கள்.
ஆகவே தமிழக மக்களோ அல்லது உலகத்தமிழர்களோ இவர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழர்களுக்கு இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்கிற நிலையே நிலவுகிறது.
காங்கிரஸின் முதல் எதிரி சீமானின் நாம் தமிழர் இயக்கமே
சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைப் பற்றி தாம் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை என்கின்றனர் தமிழக காங்கிரஸ் தரப்பினர்.
காங்கிரஸ் ஒதுங்கினாலும், நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனர் சீமான் ஒதுங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.
தமிழ்த் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயற்பட்டு தமிழ் இனத்தை சிறிலங்காவில் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம் என கூறி பிரச்சார பணிகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் சீமான்.
தாம் தமிழராய் உருவெடுத்து உள்ளதாகவும், காங்கிரசை கருவறுக்கும் வரை தான் ஓயமாட்டோம் என்கிறார் சீமான். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும் என்று அடித்துச் சொல்கிறார். இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம்.
வைகோவை அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது.
அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும். எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம். காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்’’ என்று கூறினார்.
அவர் தெரிவித்ததுபோலவே தேர்தல் களப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளார். காங்கிரஸ்காரர்களை களத்திலிருந்து ஓடுமளவு அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்கிறார் சீமான்.
தமக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பாவித்து சீமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முயல்கிறது காங்கிரஸ். கொலைக் குற்றச்சாட்டுக்கள் முதல் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் வரை காவல்நிலையத்தில் இவருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
எப்படியேனும் சீமானை பயமுறித்தி விடலாமென்று கங்கணம் கட்டிநிற்கிறது காங்கிரஸ். சீமானிடம் அது சாத்தியப்படாது என்கிறார்கள் நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள்.
ஈழத்தமிழர்கள் சீமானிடத்திலிருந்து ஒன்றை மட்டும் கேட்க ஆவலாக உள்ளார்கள். சீமான் ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அதிமுக கூட்டணியினர் ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாள்வார்கள் என்று இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது.
ஆகவே, அதிமுக கூட்டணியினர் தமிழீழ தனியரசு நிறுவ உதவியாக இருப்பார்களா அல்லது சிங்கள அரசிற்கு ஈழம் என்கிற சொல்லைக் கேட்டாலே கசப்பதுபோல அதிமுகவும் இருக்குமா?
ஈழம் என்கிற வார்த்தையை சொல்வதற்கே கூச்சப்படுபவர் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர் அல்லது சிலோன் தமிழர் என்கிற சொற்களையே இன்றுவரை கூறுபவர் ஜெயலலிதா.
இப்படிப்பட்டவரின் தலைமையில் உருவாகும் அரசினால் எப்படி ஈழத்தமிழர் நன்மை அடைவார்கள் என்பதனை சீமான் போன்றவர்கள் விளங்கப்படுத்த வேண்டுமென்பதுவே ஈழத்தமிழரின் அவா.
ஈழத்தமிழரின் விடயத்தில் திமுகவாக இருந்தாலும் சரி அதிமுக என்றாலும் சரி, இவ்விரு பிரதான கட்சிகளும் ஈழத்தமிழர்கள் மானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு சுயநிர்ணய அதிகாரம் கொண்ட தீர்வே ஒரே வழி என்கிற வாதத்தை இன்றுவரை மானசீகத்துடன் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு காலத்தில் தமிழீழமே தீர்வு என்று கொக்கரித்தவர்கள், ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயேதான் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள்.
ஆகவே, இவர்களைப் போன்றவர்களை நம்பி எப்படி படகில் பயணித்து பாதுகாப்பாக கரைசேர முடியும் என்பதே கேள்வி.
--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்--
தேசியத்தலைவரின் போராட்ட வரலாறு - 1
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவியும் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொலை !
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிட நேரத்திலேயே சிங்களப் பெண்மணியான அவரது மனைவியையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் சிறிலங்காப் படை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர். அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம் தரப்பு ஒன்றினால் இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் முன்னேறி வந்த சிறிலங்கா படையினரிடம் அவர்கள் இருவரும் சரணடைந்தனர்.
இவை எல்லாம் நடைபெறும்போது நடேசனின் மனைவியான திருமதி விஜித்ரா நடேசனும் அவர்களுடன் கூடவே இருந்தார். பின்பு, அவர்கள் இருவரும் சரணடையும் போது அந்த பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்களுடன் தானும் வெளியேறி சிறிலங்கா படையினரிடம் தன்னை ஒரு சிங்களப் பெண் என அவர் அறிமுகம் செய்தார்.
அந்த நேரத்திலேயே சரணடைந்த நடேசனையும் புலித்தேவனையும் சிறிலங்கா படையினர் சுட்டுக்கொன்றனர்.
அப்போது, துடித்து அழுது கதறிய நடேசனின் மனைவி, தனது கணவர் உட்பட அரசியல்துறையைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தபோது அவர்களைச் சுட்டுக்கொன்றது மிகவும் கொடூரமான ஒரு தவறு என சிறிலங்கா படையினருடன் கத்தி வாக்குவாதப்பட்டார் என அப்போது அந்த இடத்தில் இருந்த – பாதுகாப்புக் கருதி தனது பெயரை வெளியிட விரும்பாத – ஒரு சிங்கள செய்தியாளர் தெரிவித்திருக்கின்றார்.
நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்ததால், அவர் சிங்கள மொழியிலேயே படையினருடன் வாக்குவாதப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த போது சிறிலங்கா படையினர் நடேசனின் மனைவியை நோக்கி சரமாரியாகச் சுட்டனர் எனவும் அப்போது அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்ததாகவும் அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்தார்.
நடேசன் முன்னர் சிறிலங்கா காவல்துறையில் பணிபுரிந்தவர். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள நாரஹேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விஜித்திராவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.
விஜித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர்.
அந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார்.
1990 இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன் அவர்கள், 1991 இல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடங்கிய போது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
நடேசனின் மனைவி விஜித்ரா ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்தபோதிலும் கூட, நடேசனின் அனைத்துப் பணிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்ததுடன், தமிழ் மக்கள் பட்டு வந்த நெருக்கடிகளிலும் துன்பங்களிலும் ஒரு பங்காளியாக அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார் என்பது சொல்லப்படவேண்டியது.
அரை மணி நேரத்தில் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் உயிரோடு இல்லை என்பதை தெரிந்துகொள்!! - நடேசனின் கடைசி நிமிடங்கள்! - விபரிக்கிறார் மகன் பிரபாத் (ஐ.நா.குழுவிற்கு கடிதம்)
மனித குலத்தையே குலைநடுங்க வைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. இரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித்தனியாகத் தொங்கத் தொங்க, ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க, எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக,வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ்.....
என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள இராணுவம். - இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில் சுட்டெரிக்க, குழந்தைகள் கதறக் கதற... ஆயுதம் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்ற அப்பாவி ஈழ மக்கள் மீது எறிகணைகள், வெடிகணைகள், நச்சுக் குண்டுகளை வீசி சிங்கள இராணுவம் நிகழ்த்திய இனப் படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அமைப்புகள்.
இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றி, விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இலங்கையில் இருந்து உயிர் தப்பி வந்த ஏராளமானவர்கள், இந்தக் குழுவுக்கு தங்களின் சாட்சியங்களை அனுப்புகிறார்கள். வாக்குமூலங்களை அனுப்பிவைக்க கடைசித் தேதி கடந்த 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இப்போது அந்தக் கெடு, காலவரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சிங்கள அரசின் போர்க் குற்றங்களை நிரூபிப்பது, தமிழீழ மண்ணில் இருக்கும் மக்களுக்கு, புலம்பெயர்ந்தவர்களால் செய்யக்கூடிய ஒரே உதவியாக இருக்கும் எனும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு இதில் தீவிரம் காட்டுகிறது. இதற்கான தனித் துறையை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சாட்சியங்களைப் பெற்று ஐ.நா. பொதுச் செயலாளர் குழுவுக்கு அனுப்புகிறது, அந்த அமைப்பு.
இதன் ஒரு பகுதியாக, சரண் அடைந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனின் மகன், சிறப்புத் தளபதி ரமேஷின் மனைவி ஆகியோரின் எழுத்து வடிவிலான வாக்குமூலங்கள் ஐ.நா. குழுவிடம் போயிருக்கின்றன. அந்த வாக்குமூலங்கள் நமக்கும் கிடைத்தன.
நடேசனின் மகன் பிரபாத்:
நடேசன் என அழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் இறுதிக்கால அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த பாலசிங்கம் மகேந்திரனின் மகனான எனது பெயர் பிரபாத் சுரேஷ் மகேந்திரன். வயது 30. இங்கிலாந்தில் வசிக்கிறேன்.
கடைசியாக நான், என் தந்தை மற்றும் குடும்பத்தினருடன், கடந்த ஆண்டு மே 18-ம் தேதி இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணி அளவில்... அதாவது, அவர்கள் சரண் அடைவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு பேசினேன்.
அப்பா என்னிடம் கடைசியாகச் சொன்னது,
வெளிநாட்டு இராஜதந்திரிகள் எங்களை சிங்கள இராணுவத்திடம் சரண் அடையச் சொல்கிறார்கள். ஆனால், நானோ என்னுடன் இருப்பவர்களோ, சிங்கள இராணுவத்தின் கையில் பாதுகாப்பாக இருப்போம் என நம்பவில்லை. காயம்பட்ட போராளிகள் 1,000 பேரும், அவர்களின் குடும்பத்தினரும் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நான் சரண் அடைந்துதான் தீர வேண்டும். அது குறித்து, மேலதிக அறிவுரைகளைப் பெறுவதற்காக தலைவரைத் ( பிரபாகரனைக் குறிப்பிடுகிறார்!) தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அம்மாவும் புலித்தேவனும் என்னுடன்தான் இருக்கிறார்கள். இன்னும் அரை மணி நேரத்தில், நான் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்!’ என்றார்.
அரசியல் பிரிவினரும், பொதுமக்களும் படுகாயம் அடைந்திருக்க, உடனடியாக சிகிச்சைபெற வேண்டிய நிலையில் துன்பகரமான நிலையில் இருந்தார்கள் அவர்கள்.
கடைசி நாட்களில் சுற்றி இருந்தவர்களின் உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே என் அப்பாவின் ஒரே நோக்கமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஆயுதம் எதுவும் இல்லாத நிராயுதபாணிகளாகவே நின்றனர்.
ஆனாலும், அப்பாவையும் உடன் சென்றவர்களையும் இலங்கை இராணுவம் கொன்றுவிட்டது. நேரில் கண்டவர்களும் என்னிடம் அதுபற்றிக் கூறினார்கள். தேவைப்பட்டால், ஐ.நா. குழுவானது அவர்களுக்கு சாட்சியப் பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில், அவர்களின் விவரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறேன்...'' என்று கூறி உள்ள பிரபாத், ''அந்த சாட்சியங்கள் இன்னும் இலங்கை மண்ணில்தான் இருக்கிறார்கள்!' என்பதையும் கூறி இருப்பது அசாதாரணமானது. அவரின் இந்த வார்த்தைகள், அர்த்தம் பொதிந்தவை.ரமேஷின் மனைவி வத்சலாதேவி
புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த நேரத்தில், புலிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக நின்றவர் புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷ். நடேசனைப் போலவே, எதிரியிடம் எப்படியும் தன் உயிர் போகும் எனத் தெரிந்தும், படுகாயம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் இவர். 'போரில் கொல்லப்பட்டார்’ என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட இந்த ரமேஷ்தான், கைகள் கட்டப்பட்டு கேவலமாக நடத்தப்பட்ட காட்சியின் வீடியோ பதிவு அண்மையில் வெளியானது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி தற்போது தென் ஆபிரிக்காவில் வசிக்கிறார். அவரது வாக்குமூலமும் ஐ.நா. குழுவுக்குப் போய் இருக்கிறது.
1964-ம் ஆண்டு பிறந்த என் கணவர் துரைராஜசிங்கம், 84-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். 'ரமேஷ்’ என இயக்கப் பெயர் சூட்டப்பட்ட அவருக்கு, இயக்கத்தில் கேணல் எனும் உயர் நிலை வழங்கப்பட்டது. கடைசி ஒரு மாதத்தில் மோதல் மிகவும் மோசமாக இருந்தது. எங்கள் இடங்களை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டதால், அங்கு இருந்து வெளியேறினோம். ஏப்ரல் 28-ம் தேதி, மட்டக்களப்புக்குச் சென்றோம். மேற்கொண்டு அங்கு தங்கி இருக்க முடியாத நிலையில், தென் ஆபிரிக்காவுக்கு வந்தோம்.
என் கணவர் கடைசியாக மே 15-ம் தேதி என்னிடம் பேசினார்.'எங்களின் கடமையை முடித்துவிட்டு விரைவில் உங்களுடன் சேர்ந்துகொள்வேன்’ என சொன்னார். ஆனால், அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. போரில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்கிறது. நான் அங்கு இருந்தபோதே, என் கணவர் கொல்லப்பட்டதாக அறிவித்தார்கள். ஆனால், அவருடைய உடலைக் காட்டவே இல்லை. அதனால், அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை.
இப்போது, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் என் கணவர் சரண் அடைவதாகக் காட்டப்படுகிறது. எனவே, அவர் போரின்போது கொல்லப்படவில்லை, உயிருடன்தான் பிடிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன், இருக்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். என் கணவர் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் ஆகியும், அவருடைய நிலைமைபற்றி ஒன்றுமே தெரியவில்லை. நானும், என் பிள்ளைகளும் அவருக்கு என்ன ஆனது என்பதைப்பற்றிய கவலையிலேயே இருக்கிறோம்.
அவரைப்பற்றி பலவிதத் தகவல்கள் வருகின்றன. என் கணவரை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது என்பதை வீடியோ காட்சி நிரூபிக்கிறது. எனவே, கைது செய்யப்பட்ட போர்க் கைதி ஒருவரின் நிலைமையைப்பற்றி இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஐ.நா. குழுவானது விசாரணை நடத்தி, என் கணவரின் கதி என்ன என எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, அவருக்கு ஏதேனும் நேர்ந்திருந்திருந்தால், என் கணவர் உயிருடன் இல்லை என்றால் இலங்கை இராணுவம்தான் அவரைக் கொன்றிருக்க வேண்டும். அது இலங்கை இராணுவத்தின் அப்பட்டமான போர்க் குற்றம்!'' என்கிறார்.
இந்த வாக்குமூலங்களை அடிப்படையாகவைத்து, நாடு கடந்த தமிழீழ அரசு, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை ஐ.நா. குழுவின் முன்பு நிறுத்தி சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது.
பிரபாத், வத்சலாதேவி இருவரையும் தொடர்புகொள்ள முயன்றோம். இருவரின் உயிர்ப் பாதுகாப்பு மட்டும் இன்றி, லட்சம் மக்களின் உயிரைக் குடித்த கொடிய குற்றத்துக்கான வலுவான சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், ஐ.நா. விசாரணைக்கு முன்பு, தங்கள் படமோ பேட்டியோ இடம்பெறுவதை அவர்கள் விரும்பவில்லை என நமக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் 'இனப் படுகொலை, போர்க்குற்ற விசாரணை துறை’ அமைச்சர் டிலக்சன் மொரிஸ் நம்மிடம் பேசினார்.
இலங்கைத் தீவில் கடந்த ஆண்டு மே மாதம் ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் அப்பட்டமான இனப் படுகொலை. அவை நிரூபிக்கப்பட்டால், அங்கு இரு தேசங்கள் உருவாக வழிவகுத்துவிடும். இதனால், இதை சில மேலைநாடுகள் போர்க் குற்றம் என்று மட்டும் கூறுகின்றன. அப்படி சுருக்கிப் பார்ப்பது, மகிந்தா ராஜபக்ஷே அரசாங்கத்தை அகற்றிவிட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ரணில் விக்கிரமசிங்கவை அதிபர் ஆக்குவதற்கு மட்டுமே உதவி செய்வதாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில், நடேசனுடைய மகன், தளபதி ரமேஷின் துணைவி ஆகியோரின் வாக்குமூலங்களையும், இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலரின் குழுவுக்கு அனுப்பி உள்ளோம். ஏற்கெனவே, டப்ளினில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் மூலம் இனப் படுகொலை என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்திவிட்டோம். அதைப்போலவே, சட்ட ரீதியாகவும் பல்வேறு துறைசார் வல்லுநர்கள் மூலமும் ஈழ மக்கள் மீதான இனப் படுகொலையை நிரூபிக்காமல் விடமாட்டோம்! என்றார்.
புலம்பெயர்ந்த ஈழ மக்கள் மத்தியில் புல்லுருவிகளை உருவாக்கி, போர்க் குற்றங்களை மறைக்க ராஜபக்ஷே முயன்றாலும், இனவெறிப் படுகொலை செய்த குற்றத்துக்காக அவர்கள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என அழுத்தமாக நம்புகிறார்கள் ஈழத் தமிழர்கள்... கூடவே தமிழக ஈழ உணர்வாளர்களும்!
அமைச்சர்கள் முரளிதரன், டக்ளஸை பலிக்கடாக்களாக்குமா அரசாங்கம்?
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் 2007 ம் ஆண்டில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல்கள் கடந்த வாரம் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியிருந்தன.
இந்தத் தகவல்கள் இலங்கை அரசாங்கத்தையும் அதனுடன் இணைந்துள்ள இரண்டு முக்கிய அரசியல்வாதிகளையும் பெரிதும் திணறடித்துவிட்டன.
இந்தத் தகவல்கள் வெளியானதன் பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்றெனிஸை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த ஜீ.எல்.பீரிஸ் இலங்கை அரசாங்கத்தின் கண்டனத்தையும் விசனத்தையும் வெளியிட்டிருந்தார்.
அந்தளவுக்கு அமெரிக்காவின் தகவல் பரிமாற்றக் குறிப்புகள் இலங்கை அரசுக்கு மிகவும் பாதகமானதாக அமைந்திருந்தன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழு என இரண்டு ஆயுதக்குழுக்களின் உதவிகளை அரசாங்கம் பெற்றிருந்தது என்பது இதில் பிரதானமான குற்றச்சாட்டு.
இவர்களுக்கு அரசாங்கம் மறைமுகமாக கொடுத்திருந்த ஆதிகாரங்களால் வடக்கு, கிழக்கில் படுகொலைகள், கப்பம் பெறுதல், ஆட்களைக் கடத்துதல், சிறார் படைச்சோ்ப்பு, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் என்று ஏராளமான குற்றச்செயல்கள் இடமபெற்றதாகவும் அந்தத் தகவல்களில் கூறப்பட்டிருந்தன.
இது தொடர்பாக மிகவும் விரிவான தகவல்கள் குறிப்புகளை அமெரிக்கத் தூதரகம் பரிமாறியுள்ளது.யாழ்ப்பாணத்தில் எவ்வாறு படுகொலைகள் இடம்பெற்றன என்பதை விரிவாக விளக்கும் வகையில் இந்தப் பரிமாற்றங்கள் அமைந்திருந்தன.
இந்த அறிக்கையில் ஈ.பி.டி.பி.யும், கருணாகுழுவும் ஆயுதக்குழுக்களைப் பேணிவந்தது தொடக்கம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் பெறுதல் என்று ஏராளமான குற்றச்செயல்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்ததாக இராணுவ அதிகாரிகளே கூறியுள்ளமை, படுகொலைகளின் பின்னர் நடைபெறும் விசாரணைகள் வெறும் கண்துடைப்பாகவே இருப்பது,குற்றவாளிகளை கண்டறிவது வரை விசாரணைகள் செல்லாதிருப்பது எல்லாமே இந்த அறிக்கையில் வெளிப்பட்டன.
2004ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு,கிழக்கில் ஏராளமான படுகொலைகள் இடம்பெற்றன. 2009 ல் போர் முடிவுக்கு வரும் வரை இந்த நிலை தொடர்ந்து வந்தது. யார் கொன்றது எதற்காகக் கொல்லப்பட்டார் என்று தெரியாமலேயே பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
2006ல் யாழ்ப்பாணத்தில் தினமும் ஒன்று முதல் ஐந்து பேர் வரை சுட்டுப் படுகொலை செய்யப்படுவது ஊடகங்களில் வழக்கமான செய்தியாயிற்று. கிரிக்கட் ஸ்கோர் போல அதைக் கணக்குப்பொடும் கலாச்சாரம் அப்போதிருந்தது. படுகொலைகள் நிகழாத நாட்கள் அப்போது அரிதாகவே இருந்தன.
இந்தப் படுகொலைகள் எல்லாவற்றிற்கும் அப்போது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கைகளில் பயங்கரவாதிகள் அல்லது புலிகளே காரணம் என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் ஆதரவாளர்களாகவோ அல்லது சமாதான காலத்தில் அவர்களுக்கு உதவியவர்களாகவோ இருந்தனர்.
அதேவேளை மாற்றுக் கருத்துள்ளவர்களும் புலிகளால் கொல்லப்பட்டதும் உண்மை. இதற்குள் கருணா குழு, ஈ.பி.டி.பி. ஆகியவற்றின் உறுப்பினர்களும் அடக்கம். சமாதான காலத்தின் இறுதிக் கட்டத்திலும் போர் நடைபெற்ற காலங்களிலும் தனித்தனியாகவும் கூட்டாகவும் படுகொலை செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பற்றிய எந்த நீதி விசாரணைகளுமே இதுவரை நடைபெற்றதில்லை.
படுகொலை நடந்தவுடன் பொலிஸார் வந்து விசாரிப்பதும் அதன் பின்னர் பிரேத பரிசோதனை, நீதிமன்ற அறிக்கை வரை போவதும் தான் வழக்கம். அதற்கு அப்பால் எந்த விசாரணைகளும் செல்வதில்லை.யாருமே சந்தேகத்தில் கூடக் கைது செய்யப்படுவதும் இல்லை.
இத்தகைய படுகொலைகளில் இருந்த யாழ்ப்பாண ஊடகங்களும், அந்தத்துறை சார்ந்தவர்களும் கூடத் தப்பவில்லை. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும் அது பற்றிய செய்திகள் வெளியாகி அனைத்துலக கவனத்தை ஈர்த்தபோதும் விசாரணைகள் வழக்கம் பேலவே இடம்பெற்றன.
ஊடகவியலாளர் நிமலராஜன் 2000 ம் ஆண்டு கொல்லப்பட்ட போதும் சரி அதற்குப் பின்னர் எத்தனையோ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும் சரி குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவில்லை. அதுபோன்றே கொல்லப்பட்ட ஏராளமானோர் பற்றிய எந்த நீதி விசாரணைகளுக்கும் இடமளிக்கப்படவில்லை.
இதன் மர்மம் என்னவென்ற பொதுமக்களில் பலரும் அறிந்தே இருந்தனர். ஆனால் அதை வெளிப்படுத்த முடியாத நிலை அவர்களுக்க இருந்தது. இப்போது அமரிக்காவின் தகவல் பரிமாற்றக் குறிப்புகள் இதன் பின்புலத்தை வெளிப்படுத்தியுள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்'தபாயவின் உத்தரவின் பேரில் கொலையாளிகள் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் ஒருவரைப் படுகொலை செய்வதற்கு திட்டமிடும் போது அந்த இடத்தில் இருந்து படையினர் தற்காலிகமாக விலகிக்கொள்வது தொடக்கம் பின்னர் அங்கு வந்து விசாரிக்கும் முறை வரைக்கும் இந்த தகவல்களில் உள்ளடங்கியுள்ளன.
பெண்களைப் பலவந்தமாகக் கொண்டுசென்று படையினரின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு நிர்ப்பந்தித்ததாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டு வடக்கில் ஈ.பி.டி.பி. மீதும் கிழக்கில் கருணா குழு மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
இவையெல்லாம் ஆயுதக்குழுக்களை அரசாங்கம் தனது தேவைக்காக எப்படி பயன்படுத்தியது என்பதை அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்துக்குக் கொண்டுசென்றன. அவ்வப்போது அமெரிக்கா ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசுக்குக் கூறி வந்ததற்கான காரணம் இப்போது புரிகிறது.
சுமார் இரண்டரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆயுதக்குழுக்களின் மூலம் குற்றச்செயல்களை புரிந்ததாக அமெரிக்காவின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் இப்போது அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்கள்.
இவர்களைக் காப்பாற்றவேண்டிய காரணத்தினாலும் ஆயுதக்குழுக்களுடன் அரசாங்கம் தொடர்புகளை வைத்திருந்தது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்காகவுமே விழுந்தடித்துக்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அமெரிக்கத் தூதுவரை அழைத்து விசனம் வெளியிட்டார்.
இது இராஜதந்திர முறைகளை மீறும் வகையில் அனுப்பப்பட்ட குறிப்புகள் என்றும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலான நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் இது போன்ற பணியைத்தான் செய்கின்றன.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் எல்லா நாடுகளின் மீதும் அதற்கு ஒரு கண் உள்ளது. ஆனால் சிறிய நாடுகளின் தேவை அப்படிப்பட்டதல்ல. ஐரோப்பிய, அமெரிக்க, கிழக்காசிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கூட இதுபோன்ற புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் சார்ந்த தகவல்களைத் திரட்டுகின்றன. அதையே தான் அமெரிக்கத் தூதரகமும் செய்துள்ளது. இலங்கை மீதான அமெரிக்காவின் அக்கறை அதிகமாக உள்ளதால் அதிகமான தகவல்களை அது திரட்டியுள்ளது.
சிறார்கள் படைச்சோ்ப்பு, சட்டத்துக்கு விரோதமான படுகொலைகள், கப்பம் பெறுதல், பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது என்று சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. இதனால் தான் அரசாங்கம் அதிகம் கவலை கொண்டுள்ளது.
கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சர்களாக இருக்கின்ற நிலையில் அமெரிக்காவின் பார்வை இலங்கை மீது ஒரு மாதிரியானதாகவே இருக்கும். இத்தகைய தகவல்கள் அவர்களைப்பற்றி எத்தகைய எண்ணப்பாட்டை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.
இதனால் தான் சர்வதேச நெருக்கடியில் இருந்து தப்பிக்கொள்வதற்கு அரசாங்கம் டக்ளஸ் தேவானந்தா, கருணா பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கப்படவேண்டும் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அரசாங்கம் அத்தகைய விசாரணைகளுக்கு முன்வரப்போவதில்லை.
இதில் அவர்கள் பலிக்கடாக்களாக்கப்படுவதையிட்டு அரசாங்கத்துக்கு கவலை இருக்காது. ஏனென்றால் ஈப்போது அவர்களின் தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்றே சொல்லலாம். எனவே அத்தகைய நடவடிக்கைக்கு அரசாங்கம் தயக்கம் காண்பிக்காது.
ஆனால் அவர்களை இயக்கியது யார் என்பது வெளிப்பட்டுவிடும் என்ற நெருக்கடி அரசுக்கு இருக்கிறது. அதனால் இந்த விடயத்தில் அரசாங்கம் அமெரிக்கத் தூதுவரை அழைத்து விசனத்தை வெளிப்படுத்தியதற்கு அப்பால் செல்ல விரும்பாது.
ஏனென்றால் இதைக் கிளறப் போனால் ஆபத்து வெளிப்படும் என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரியும்.
தமிழீழம் – நடப்பும்! எதிர்பார்ப்பும்! - ஆய்வு
ஒரு சமூகம் முன்னேற்றம் கண்டு பீறுநடை போடுகிறது என்றால் அந்த சமூகத்திற்குத் தலைமை தாங்கி எழுச்சியை வழிநடத்தும் பெரியோர்களின் உழைப்பும் ஓயாத சமூக சிந்தனையுமே காரணமாக முடியும் அதைப் போல் ஒரு சமூகம் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்குப் பொறுப்பாக அந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகள் தான் காரணமாக முடியும்.
இடையூறுகள் எந்த வடிவில் வருகின்றன என்பதை தமிழீழத்தின் வரலாறு எமக்கு உணர்த்துகிறது
அடிபட்ட ஈழத் தமிழனாகச் சில உண்மைகளை வெளிப்படுத்தலாம் என்று எண்ணுகிறோம். மிகத் தொன்மையான தமிழினம், கலை, கலாச்சாரப் பண்பாடு மரபுரிமைமிக்க தமிழினம் ஏன் இந்தக் கீழ் நிலைக்கு வந்தது. மொழி உணர்விற்கும் இன ஒற்றுமைக்கும் எம்மால் என்ன செய்ய முடியும்.
இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பு இல்லாமல் செல்லும் படகு போன்றது. எந்த இலட்சியத்திற்காக உயிர் துறக்கப்படுகிறதோ அதுவே ஒருவனைத் தியாகி ஆக்குகிறது இவை தமிழீழ வரலாற்றில் நாம் கற்ற பாடங்கள்
பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த சமாதான ஒழுங்கமைப்பாளர்கள் திட்டமிட்டு தமிழீழ வரலாற்றை முற்றுப்பெறச் செய்ய நினைத்தார்கள். நினைத்ததைச் செய்து முடித்தார்கள். கட்டமைப்புக்களை உடைத்தாலும் ஈழத் தமிழன் நெஞ்சில் பொங்கும் விடுதலைக் கனலைத் தணிக்க அவர்களால் முடியவில்லை.
தத்தம் தேசிய நலனுக்காக தமிழீழத்தை பகடைக்காயாக நகர்த்த உலக நாடுகள் முனைகின்றன. தமிழர்களைக் கொடூரமாக நடத்தும் கனடா அரசு தனது தூதர் மூலம் மனித உரிமைகளின் புனிதத் தன்மை பற்றிப் பேசுகிறது. மேற்குலகின் இரட்டை வேடம் இதன் மூலம் புலப்படுகிறது.
ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளையும் சுனாமிகளையும் எரிமலை உற்பாதங்களையும் சந்திக்கிறது. நெருக்கடிகளுக்கும் கொந்தளிப்பான சூழ்நிலைகளுக்கும் முகங்கொடுக்கிறது. எமது எதிரிகளையும் நண்பர் வேடமிடும் நயவஞ்சகர்களையும் இனங் காண்பது எமது பொறுப்பு.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்து நிர்வாகஞ் செய்த நிர்வாகக் கட்டமைப்பு உலகிற்கோர் புதுமை. விடுதலை இயக்கங்கள் பின்பற்றும் பெறுமதிமிக்க முன்னுதாரணம். ஏறத்தாழக் கால் நூற்றாண்டு காலம் வடக்கும் கிழக்கும் இணைந்த தரைப்பரப்பில் தமிழீழத்தை அமைத்துப் பரிபாலனம் செய்தார்கள்.
தன்னாட்சி பெற்ற நாட்டிற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தமிழீழம் வீழ்ச்சி கண்டதற்கு அரசியல் முதன்மை பெறாத ஆயுதப் போராட்டம் வெற்றி அடையாது என்ற பேருண்மை முழுமுதற் காரணமாக அமைகிறது. இதை நன்குணர்ந்த புலம்பெயர் தமிழுறவுகள் சரியான பாதையில் செல்கிறார்கள். அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். வரவேற்கிறோம்.
எமக்கு ஆதரவுப் பிற்புலம் இல்லாமல் போய் விட்டது. எம்மைத் தேடி வந்தவர்களும் நாடிப் பேச்சுக் கொடுத்தவர்களும் எமக்கு குழிபறிப்பதைக் குறியாகக் கொண்டிருந்தனர். எம்மால் இந்த இடையூறை எப்படித் தவிர்க்க முடியும். இது தேசிய நலனுக்காக உழைக்கும் உலகம்.
ஆதரவுக்கு பிரதியுபகாரமாக வழங்க ஈழத் தமிழினத்திடம் என்ன இருக்கிறது? இந்தியப் பேரரசு சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து தமிழீழ அழிப்புக்கும் ஈழத் தமிழின வீழ்ச்சிக்கும் திட்டமிட்ட காலகட்டத்தில் புதுடில்லிக்கு ஒரு முக்கிய செய்தியை அனுப்பி வைத்தோம்.
ஈழத் தமிழினம் பலமாக இருக்கும் வரை மட்டும் தான் சிங்களத் தலைமை இந்தியாவுக்கு அடி பணியும். இந்திய உதவியோடு தமிழீழம் அழிக்கப்பட்டுவிட்டால் சிங்களத் தலைமை இந்தியாவை உதாசீனம் செய்யத் தயங்கமாட்டாது. இது அரசியல் கற்றுணர்ந்தோர் வலியுறுத்தும் அடிப்படைப் பாடம்.
இதை உணர இந்தியா மறுத்து விட்டது. அதற்கான விலையை இந்தியப் பேரரசு இப்போது கொடுக்கத் தொடங்கியுள்ளது. சிங்களத் தலைமை இந்தியாவுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் என்ற எதிர்பார்ப்பு தோல்வி கண்டுள்ளது. சிறிலங்காவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் இந்தியாவின் உபாயங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா – இலங்கைப் பலச் சமநிலையில் பிறழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழீழக் கட்டமைப்பு அகற்றப்பட்டதால் ஒரு வெற்றிடம் தோன்றியுள்ளது. இந்த வெற்றிடம் வெறுமையாக இருக்கும் வரை இந்தியா சொல்வதைச் செய்யும் நிலைக்கு இலங்கை வரப்போவதில்லை.
தமிழீழம் என்ற யதார்த்த அரசு தோன்றியதற்கு தமிழீழத் தலைவர்கள் பொறுப்பாக இருந்தாலும் அதன் வீழ்ச்சிக்குப் புறக்காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக அரசுகள் ஒன்று சேர்ந்தது சிங்கள அரசை ஆதரித்தன இந்தியாவின் நேரடிப் பங்களிப்பிற்கு ஊக்குவிப்பு வழங்கின.
தமிழீழதிற்கு இஸ்ரேயிலைத் தாங்கிப் பிடிக்கும் அமெரிக்காவைப் போன்ற நட்பு நாடு கிடைக்கவில்லை. இன்று பாலஸ்தீனர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்காக இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. நேர்மையான இடைத் தரகராகவும் மத்தியட்சகராகவும் தோன்றும் அமெரிக்க அரசு உண்மையில் இஸ்ரவேலின் பாதுகாவலன் என்பது உலகறிந்த விடயம்.
இஸ்ரவேல் – பாலஸ்தீன இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை விட பிறிதோர் நாட்டால் முடியாது. அமெரிக்காவை மீறிப் பிறிதோர் நாடு இதில் தலையிட வாய்ப்பில்லை. என்ன காரணம்? அமெரிக்கா உள் விவகாரங்களிலும் வெளி விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அமெரிக்க யூதர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவை யூதர்கள் ஆட்டிப் படைக்கிறார்கள்.
தமிழீழ விவகாரத்தில் அன்றும் இன்றும் இந்திய அரசிற்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க உலக நாடுகள் தயாரில்லை. பிராந்திய வல்லரசான இந்தியா வைத்தது தான் சட்டம். அமெரிக்க யூதர்களிலும் கூடிய ஆதிக்க நிலையில் இந்தியாவின் 6.5 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்.
யூதர்களைப் போலல்லாது தமிழகத் தமிழர்கள் நடுவண் அரசில் பங்காளிகளாகவும் முக்கிய அமைச்சுகளின் பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக விரலசைக்க மாட்டார்கள். அவர்களுக்கு உடனடி அரசியல் இலாபம் தான் முக்கியம்.
தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் துயரம் தமிழ் நாட்டிலுள்ள புத்திஜிவிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஈழப் பிரச்சனை பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் தமது வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அரசியல் பிரச்சனையாகக் குறுக்கிவிட்டனர்.
அடுத்தவர் சிந்தனை, அதன் அடிப்படையில் நகர்வுகள், நகர்வுகளால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய முன் கூட்டிய அளவீடுகளில் மரபு ரீதியான இராஜதந்திரம் காலம் காலமாக ஈடுபடுகிறது. இந்திய இராஜதந்திரத்திற்கு இந்தக் கரிசனை நிறைய உண்டு.
சிங்களத் தலைமையால் ஏமாற்றப் பட்டோம் என்ற ஆதாரபூர்வமான எண்ணம் இந்திய அரசியல் தலைமையிடம் உண்டு. இதற்கு மாற்றீடாக அவர்களால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் இருக்கிறார்கள். புதுமையான நகர்வுகளை மேற்கொள்ளும் திராணி அவர்களிடம் இல்லை.
அரசியல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் பிரதமர் பதவிக்காகக் காத்திருக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈழத் தமிழர்களின் உரிமைக்காக இலங்கை அரசு மீது இந்தியா அழுத்தம் பிரயோகிப்பதாகச் சொல்கிறார். இது கருணாநிதியின் கடிதங்கள் போல் வெற்று வேட்டுக்களாகும்.
இதற்கிடையில் ஐக்கிய இராச்சிய அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈழத் தமிழர்களின் சார்பில் நடவடிக்கையில் இறங்கப் போவதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதன் நோக்கமும் இலக்கும் தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால் இந்தியா உசாராகி விட்டது.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு தனது நாட்டில் இயல்பு நிலமையை ஏற்படுத்த முடியாத இந்திய அரசால் எப்படித் தான் தமிழீழப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். குழப்ப நிலையை ஏற்படுத்த மாத்திரம் அதனால் முடியும் என்பது வரலாற்று உண்மை.
மேற்கு நாடுகளின் நகர்வுகள் பற்றிய விவரங்கள் எமக்கு சரிவரக் கிடைக்கவில்லை. இந்தியாவை மீறி அவர்களால் என்ன செய்ய முடியுமோ தெரியவில்லை. அப்படிச் செய்யத் துணிந்தால் இந்தியா அதை அனுமதிக்குமா என்பது மிக முக்கியமான கேள்வி.
ஒன்றை மாத்திரம் இவ்விடத்தில் உறுதியாகக் கூறமுடியும். இந்தியா செக்மேற் செய்யத் தயாராகி விட்டது. அழிவை ஏற்படுத்தும் இந்திய அரசினால் ஆக்கபூர்வமான கருமம் செய்ய இயலாது. இந்திய நாட்டின் நவீன இராஜதந்திரப் போக்கு இப்படித் தான் இருக்கிறது.
தமிழீழத்தை அழித்தவர்களால் அதற்கு மாற்றீடாகத் ஏதோவொரு கட்டமைப்பை தன்னும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை. இது ஈழத் தமிழர்களின் சோக வரலாறு மாத்திரமல்ல, இந்தியாவின் சோக வரலாறாகவும் அமைகின்றது.
மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ சர்வாதிகார ஆட்சி ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் தேசிய ஆன்மா ஆயுத பலாத்காரத்தின் மூலமாக நசுக்கப்படுகிறது தமிழினத்தை அடிமைப்படுத்தும் நோக்குடன் சிங்கள அரசு செயற்படுகிறது.
இதற்கு இந்தியாவின் நடவடிக்கைகள் தான் காரணம். மீண்டும் ஈழத் தமிழினத்திற்கு மேலதிக சிக்கல்களையும் உபத்திரவங்களையும் ஏற்படுத்த இந்தியா ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக அறிகிறோம். தமது இராஜதந்திரக் குறைபாடுகளுக்காக தமிழனைப் பலிக்கடாவாக்க இந்தியா முனைப்புக் காட்டுகிறது.
நீண்டதும், கடினமானதும் அபாயகரமானதுமான தமிழீழ யுத்தத்தில் எமது வீரர்கள் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள், துன்பங்களை எழுத்தில் விவரிக்க முடியாது. இது தேசிய தலைவர் பிரபாகரனின் வாக்கு மூலம். வீரர்கள் என்ற பதத்துடன் பொது மக்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
போர் முடிந்தாலும் போராட்டம் முடியவில்லை என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்தே வரலாறு படைக்கும் சக்தி வாய்ந்த ஆபூர்வ மனிதர்கள் தோன்றுகிறார்கள் போராட்ட வடிவங்கள் மாறலாம்! விடுதலை இலட்சியம் மாறமாட்டாது. தமிழுறவுகள் இதை நன்கு உணரவேண்டும்.
ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு
16.12.2010 அன்று இணையத்தளமொன்று, ரைம்ஸ் ஒவ் இந்தியா என்ற புதினப் பத்திரிகையை மேற்கோள் காட்டி "மன்மோகன் சிங் உட்பட முக்கிய தலைவர்களை கொல்ல புலிகள் திட்டம்“ என்ற செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது,
அந்தச் செய்தி பற்றி அறிய ரைம்ஸ் ஒவ் இந்தியா இணையத்தளத்தை பார்வையிட்ட போது வீடியோ கிளிப்பாக வெளியிட்ட அந்தச் செய்தியில் தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளையும் அதில் காட்டியிருந்தார்கள்.
தமிழ் இணையத்தள செய்தி எமக்கு சில உண்மைகளை உணர்த்தி இந்தியாவின் நடத்தை மீது சில வினாக்களையும் எழ வைத்துள்ளன.
இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக ஈழத்தமிழர்களின் சுதந்தரப் போரை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் இந்தியா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்து சமுத்திரத்தில் பூகோள முக்கியத்தவம் வாய்ந்த கேந்திர மையத்தில் இலங்கை அமைந்திருப்பதும் இலங்கை தனது பொருளாதார வளங்களின் மேம்பாட்டை விருத்தி செய்வதற்கான அனுகூலங்களும் சூழ்நிலைகளும் நிறையவே காணப்பட்டிருப்பதும் காரணங்களாகின்றன.
இலங்கை மீதான இந்தியாவின் தலையீடு ஏதோ தமிழரின் சுதந்திரப் போரின் ஆரம்ப காலகட்டத்தை அண்மித்ததாக கருத முடியாது. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர் மீது ஒடுக்குமுறை ஆரம்பிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தியா தனது பார்வையை இலங்கை மீது ஆழமாக வைக்கத் தொடங்கியது.
ஜனநாயக வழிமுறையிலான தமிழர்களின் சுதந்திரப் போரின் நடவடிக்கைகளில் தமிழர்களின் பிரதிநிதிகள் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியே வந்திருக்கின்றனர். இக்காலகட்டங்களில் தமிழர்கள் எதிர்நோக்கிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை வழிமுறைகளை தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு இந்தியா கூறிய அதே நேரத்தில் அதிலிருந்தே இலங்கை மீதான அழுத்தத்தை பிரயோகிக்கும் தந்திரத்தையும் கையாண்டது.
ஒரே நேரத்தில் பாம்பிற்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுகின்ற இராஜதந்திரத்தை தமிழர்களுக்கும் இலங்கையரசிற்கும் காட்டியது இந்தியா. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை மட்டுமல்ல முழு இந்தியாவையுமே தமது உறவாக ஈழத்தமிழர்கள் நேசித்தார்கள்,அந்நிலை இன்றுவரை தொடர்கின்றது.
ஈழத்தமிழரின் இத்தாராள பண்பு அவர்களின் நடவடிக்கையை சாண் ஏற முழம் சறுக்குவது போல் பின்னோக்கி கொண்டு சென்றது.
ஈழத்தமிழர்கள் சார்பாக பேசுகிறோம், கண்டிக்கிறோம், அதிகபட்ச உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்ற இந்திய இராஜதந்திரிகளின் ஒப்புதல்களை தமிழர்கள் நம்ப வேண்டிய சூழ்நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது.
பிள்ளையை கிள்ளிவிடுவது போல் சிங்களவாதிகளுக்கு பெரும்பான்மை நிலவரத்தை சுட்டிக்காட்டியும் உரிமையை வாங்கித் தருகின்றோம் என்ற தொட்டிலை ஆட்டுவது போல் தமிழரிடத்தில் நடந்து கொண்டது இந்தியா.
உடனடியாக இறப்பு ஏற்படுத்தாது மெதுவாக இறக்க கொடுக்கும் மருந்து போல் தமிழர்களை மெதுவாக அழிக்கும் இனவாதப் போக்கை கண்டிப்பது போல் நடித்து கண்டிக்காமல் விட்டது இந்தியா.
இந்தியா மீதான தமிழர்களின் விசுவாசம் இந்தியாவிற்கு பலமான அத்திவாரமாகவிருந்து. இலங்கை ஒரு சிறு தீவாகவிருப்பது இந்தியாவின் மெலிதான நிர்வாகத்திற்குட்பட்டும் இருந்தமையும் உலக நாடுகள் தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்த்தது.
இந்தியாவின் கைகளை விலக்கிக் கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மற்றைய நாடுகளை அணுக முடியாத பூகோளச் சூழ்நிலை தொடர்ந்தும் தமிழருக்கு தடையாகவே இருந்தது.
தமிழர்களின் பிரச்சினை எக்காலத்திலுமே தீர்வை எட்டக்கூடாதென்பதில் இந்தியா மிகக் கவனமாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் தென்பகுதியில் தமிழ்நாடும் இலங்கையின் வடகிழக்கு தமிழர்கள் பிரதேசமாகவிருக்கின்ற பூகோள சரித்திர இனக்குழுமச் சான்றுகள் தமிழகத் தமிழரையும் ஈழத்தமிழரையும் ஒருமித்த போக்குக்கு கொண்டுவராமலிருப்பதிலும் இந்தியா கவனம் செலுத்தியது.
இலங்கையரசின் இனவாத நோக்கம் கொண்ட ஒடுக்குமுறை,ஒரே நேரத்தில் தமிழரையும் இலங்கையரசையும் தனது நலனுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்திய இந்திய அரசு, இலங்கையரசுடன் தமிழர்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கபட எண்ணத்தில் „நாளை“என்ற ஆறுதல் வார்த்தையில் தீர்விற்கு வர முடியாத திட்டங்கள் ஊடாக இழுத்தடித்து வந்தது.
இலங்கையரசு திட்டமிட்டு தமிழரை அழிக்கும் நடைமுறையை இனக்கலவரங்கள் போன்றவற்றின் மூலம் அரங்கேற்றியது. தமிழ் இனத்திலிருந்து ஒரு ஆணோ பெண்ணோ அழிக்கப்பட்டால் அவர்களிருவரிடமிருந்து தோன்றும் தலைமுறைகள் இல்லாது போய் தமிழனத்தின் எண்ணிக்கை குறைவடைவதை திட்டமிட்டு இலங்கையரசு நடத்தியது.
இன அழிப்பு, இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் அகப்பட்ட ஈழத்தமிழினம் விடுதலைக்கான தீர்வாக ஆயுதத்தை முன்னெடுத்த போதும் அவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி போராளிகளை அழிப்பதாக சொல்லிக் கொண்டு தமிழரை அழிக்கத் தொடங்கியது.
போராளிகளான தமிழர், பொதுமக்களான தமிழர் என இருவகையினரையும் அழித்தல் சிறுபான்மையாக இருந்த தமிழினத்தை மேலும் உதிரிகளாக்கும் திட்டத்திற்கமைய இன அழிப்பு இடம்பெற்றது. எண்ணிறந்த தொகையிலான உயிர்கள் அழிக்கப்பட்டு தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்ட போதும் சாம்பலிலிருந்து உயிர்பெற்றெழும் பீனிக்ஸ் பறவை போல் தமிழர்கள் மீண்டும் மீண்டும் சிலிர்த்தெழுந்தது இலங்கையரசிற்கு அதிர்ச்சி கொள்ள வைத்ததுடன் ஆத்திரம் கொள்ளவும் வைத்தது.
ஏற்கனவே காலத்திற்கு காலம் அழிக்கப்பட்ட போதும் சிறுபான்மையினம் மேலும் மேலும் சிறுபான்மையினமான போதும் போராட்ட வீச்சுக் குறையாததால் புலிகளை அழித்தால் தமிழர்கள் உருக்குலைந்து சிதைவார்கள் என தப்புக் கணக்கு போட்டு இந்தியா சீனா இன்னும் வேறு சில நாடுகளின் உதவியுடன் முள்ளிவாய்க்கால் போரில் இலட்சம் இலட்சமாக பிறப்பெடுக்கவிருந்த தமிழர் பரம்பரை அழிக்கப்பட்டு மிகுதியானோர் முள்வேலிக்குள் முடக்கப்பட்டார்கள்.
கலாச்சார ரீதியாக பெண்கள் வதை முனனெடுக்கப்பட்டால் தமிழரின் சுதந்திர முனைப்பு தவிடு பொடியாகிவிடும் என நினைத்து போராளிப் பெண்கள் மற்றைய பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் தமிழர்கள் தமது போராட்ட ஆயுதமாக ஜனநாயக மரபை எடுத்த போது இந்தியாவும் இலங்கையும் மட்டுமல்ல முழு உலகமும் விழிகளை அகலத் திறந்தன.
விடுதலைக்காக நீங்கள் அயுதத்தை எடுத்தது தவறு மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது தவறு ஜனநாயக வழிமுறையில் போராடுங்கள் என இலங்கை இந்தியா உட்பட முழு உலகமுமே சொன்னது.ஈழதத்தமிழர்கள் அந்த வழிமுறையைக் கையாண்ட பொது பதில் சொல்ல முடியாத நிலைக்கு தலை கவிழ்ந்த இந்தியா இப்பொழுது புலி வருகுது இந்தியத் தலைவர்களைக் கொல்லப் போகின்றது என்ற சூழ்ச்சித்தனமான துரோகத்தனமான அறிக்கையை விடுகின்றது.
முள்ளிவாய்க்காலுடன் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொன்ன இந்தியா தனது நாட்டில் புலிகளுக்கு போடப்பட்ட தடை ஏன்? இத்தடை புலிகளுக்காக அல்லது தமிழர்களுக்காக அல்லது தமிழரின் விடுதலை உணர்விற்கா?.தமிழகத்தில் புலிகள் பரவிவிட்டார்கள் என்றும் கேரளத்தில் புலி உறுப்பினர்கள் கூடியிருக்கிறார்கள் என்றும் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கட்டியம் கூறப்பட்டு புலிகள் இந்தியத்தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டியுள்ளது என்ற வதந்தியை பரவவிட்டிருக்கிறது இந்திய அரசு ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை மூலமாக.
இந்த அறிக்கையில் அமரர் ராஜீவ் காந்தியின் கொலையையும் சேர்த்து பின்னி விட்டிருக்கின்றது இந்திய அரசு. அமரர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போல் பாசாங்கு செய்கிறார்கள் சில சூத்திரதாரிகள். உண்மையான இரகசியங்கள் யாவும் ஆழமாக புதைக்கப்பட்டு அதன் மேல் ஈழத்தமிழரை நட்டு வைத்திருக்கின்றது இந்திய அரசு.
ஈழத்தமிழரின் ஜனநாயகப் போரை தட்டிக்கழிக்க முடியாத நிலையில்,தமிழருக்கான தீர்வை வரையறுக்க முடியாத கால எல்லைக்கு கொண்டு செல்வதற்காக இப்படி ஒரு புரளியை கிளப்பி இந்திய மக்கள் ஈழத்தமிழர் மீது தொடர்ச்சியான வெறுப்பை புதுப்பித்துக் கொள்ளவே இத்திட்டம்.
இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்து சென்றவுடன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை சூது நிரம்பியதே. புலிகள்தான் அழிந்துவிட்டார்களே அப்படியானால் இவரகள் எவரைச் சொல்கிறார்கள்.
அங்கயற்பிரியன்
eelaija@hotmail.de