Friday, December 3, 2010
இலங்கை அரசின் வெளிவராத கோரமுகம்
புலிகளின் முக்கிய தளபதியொருவரும் படுகொலை செய்யப்படும் காட்சிகள் செனல்4 ஒளிக்காட்சிகளில் உள்ளடங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட புலிகளின் முக்கிய தளபதியொருவர் படையினரால் தந்திரமாக சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பின் படுகொலை செய்யப்படும் காட்சியும் செனல்4 ஒளிக்காட்சிகளில் உள்ளடங்கியிருக்கின்ற போதிலும் அதனை இன்னும் யாரும் கண்டு பிடிக்கவில்லை என்பதாக இலங்கை பாதுகாப்பமைச்சின் ஊடகப் பணிப்பாளர் லக்ஷ்மண் உலுகல்லை தன் நெருக்கமான நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
உடைகள் களையப்பட்டு, முகத்தின் பாதி மறைக்கப்பட்டுள்ளதால் குறித்த முக்கியஸ்தரை இன்னும் யாரும் அடையாளம் காணவில்லை என்று ஏளனச் சிரிப்பை உதிர்த்திருக்கும் அவர், அந்த விடயம் வெளிவந்தால் இலங்கைக்குப் பெரும் அபகீர்த்தி ஏற்படும் என்பதையும் அச்சத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த புலி முக்கியஸ்தர் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டிருப்பதாக இதற்கு முன் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததாகவும் தெரிய வருகின்றது.
எனவே புலிகளின் முக்கியஸ்தர்களை தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர்கள் அதனை நன்றாக அவதானித்து இலங்கை அரசின் வெளிவராத போர்க்குற்றமொன்றை அம்பலப்படுத்த உதவுமாறு எமது தகவல் வட்டாரங்களிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment