Saturday, March 26, 2011

மறக்க முடியுமா ? …


Thursday, March 24, 2011

செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரை திட்டம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 23-3-2011 அன்று ஆன்றோர் அவயக்குழு மற்றும் கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆன்றோர் குழு தலைவர் வே.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார், செயலாளர் ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் தீரன்,தமிழ் முழக்கம் சாகுல் அமீது,தேனிசை செல்லப்பா,அறிவரசன் அய்யா,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த பரப்புரை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செந்தமிழன் சீமான் அவர்களின் பிரச்சார சுற்றுப்பயணம் குறித்து திட்டம் தீட்டப்பட்டது.
நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப் பயண விவரங்கள்.
25.03.2011 – வெள்ளி
மாலை – 5.00 மணி திசையன் விளை
26.03.2011 – சனி
காலை 9.00 – மணி உவரி
காலை 10.- 00 – மணி - இராதாபுரம்
காலை 12.00 - மணி - காவல் கிணறு
மாலை 05.00 - மணி - வள்ளியூர்
இரவு - 8.00 – மணி களக்காடு
27.03.2011 - ஞாயிறு
காலை – 10-00 – மணி புளியங்குடி
நண்பகல் – 6.00 மணி கடையநல்லூர்
மாலை - 8.00 0 - மணி விருதுநகர்
28.03.2011 – திங்கள்
காலை – 10..00 – மணி வேடசந்தூர்
நண்பகல் 12.00 – மணி நிலக்கோட்டை
மாலை – 5.00 - மணி திருப்பரங்குன்றம்
இரவு 8.00 – மணி மதுரை வடக்கு
29.03.2011 – செவ்வாய்
காலை – 11.00 – மணி – இராமேஸ்வரம்
மாலை – 5-00 - மணி – இராமநாதபுரம்
இரவு - 8.00 - மணி - பரமக்குடி
30.03.2011 – புதன்
காலை 11.00- மணி சிவகங்கை
மாலை 5-00 மணி காரைக்குடி
இரவு 8.00 – மணி திருமயம்
31.03.2011 – வியாழன்
காலை 10.00 – மணி – பொன்னமராவதி
நண்பகல் 12.00 – மணி அரிமளம்
மாலை 5.00 – மணி பேராவூரணி
இரவு 8.00 - மணி - பட்டுக்கோட்டை
01.4.2011 வெள்ளி
காலை 11.00 – மணி திருத்துறைப்பூண்டி
மாலை 5.00 - மணி - மயிலாடுதுறை
இரவு 8.00 - மணி - பாபநாசம்
02.04.2011 – சனி
காலை – 11.00 மணி அரியலூர்
மாலை - 5.00 – மணி விருத்தாச்சலம்
இரவு - 8.00 – மணி ரிசிவந்தியம்
03.04.2011 ஞாயிறு
காலை – 11.00 மணி - சென்னை மயிலாப்பூர்
மாலை – 5.00 – மணி - இராயபுரம்
இரவு - 8.00 - மணி - தியாகராயர் நகர்
04.04.2011 - திங்கள்
காலை விமானப் பயணம் – கோவை
காலை 11.00 – மணி – சிங்காநல்லூர்
மாலை 5.00 - மணி தொண்டாமுத்தூர்
இரவு 8.00 - மணி - கோவை
05.04.2011 - செவ்வாய்
காலை 10.00 – மணி அவிநாசி
மதியம் 5.00 மணி திருப்பூர்
மாலை 7.00 - மணி காங்கேயம்
இரவு 9.00 - மணி - கரூர் ;
06-3-2011 - புதன்கிழமை
காலை 11.00 – மணி திருச்செங்கோடு
மாலை 5.00 - மணி - மொடக்குறிச்சி
இரவு 8.00 - மணி - ஈரோடு
07.04.2011 - வியாழன்
காலை 10.00 மணி ஆத்தூர்
மதியம் 1.00 மணி சேலம்
மாலை 5.00 மணி கிருஷ்ணகிரி
இரவு 8.30 மணி - ஓசூர்
08.04.2011 – வெள்ளி
காலை 10.00 – திருப்பெரும்புதூர்
நண்பகல் 12.00 – மணி சோளிங்கர்
மாலை 5. 00 -மணி - ஆம்பூர்
இரவு 8.00 - மணி - வேலூர்
09.04.2011 - சனி
காலை – 10. 00 மணி – கலசப்பாக்கம்
நண்பகல் – 12. 00 – மணி செங்கம்
இரவு - 6.00 - மணி - புதுவை
10.04.2011 - ஞாயிறு
காலை 11. 00 – மணி விமானப் பயணம் – தூத்துக்குடி
மாலை 5.00 - மணி -விளாத்திக்குளம்
இரவு 8.00 - மணி ஸ்ரீவைக்குண்டம்
11.04.2011 – திங்கள்
மதுரையிலிருந்து காலை விமானப் பயணம் – சென்னை
காலை 10.00- மணி மதுராந்தகம்
நண்பகல் 1.00 மணி பூந்தமல்லி
நண்பகல் 3.00 – மணி ஆவடி.
நிறைவுப் பொதுக்கூட்டம்

Naam Tamilar Canada March 2011


Seeman anna's speech Part1


Seeman anna's speech Part2


Seeman anna's speech Part3

தமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த நாளை (25.03.11) நெல்லையில் துவங்குகிறது நாம் தமிழரின் போர் முழக்கம் !!! அரசியல் யுத்தம் !!!

தமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த நாளை (25.03.11) நெல்லையில் துவங்குகிறது போர் முழக்கம் !!! நாம் தமிழரின் அரசியல் யுத்தம் !!!
தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு ஈழத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி தமிழ் இனத்தை கொத்துகொத்தாய் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும். இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கமிடுவார்.
இதன் தொடக்கமாக நாளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பளார் செந்தமிழன் சீமான் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தனது போர் முழக்கத்தை தொடங்குறார். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரசாரம் தொடரும் .

Monday, March 21, 2011

புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு

ஜப்பானிய நிலநடுக்கம் காரணமாக உலகில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட திகதியிலிருந்து புவிச்சுழற்சியின் வேகம் அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஜப்பானியப் நில அதிர்வைத் தொடர்ந்து புவியின் சுழற்சி வேகம் 1.6 மைக்ரோ செகண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானி ரிச்சர்ட் கிரேஸ் இன் ஆய்வின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு்ள்ளது. அதன் பிரதிபலனாக வெள்ளிக்கிழமையின் நாள் சுருங்கியுள்ளது. அதிலும் பகல் பொழுதின் நேரமே குறைந்துள்ளது.
அவ்வாறு ஒரு நாளின் பொழுது சுருங்கிய நிகழ்வானது வெள்ளிக்கிழமையுடன் நின்று விடும் என்றே நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்பும் கடந்த வருடம் சிலியில் இடம் பெற்ற பூமியதிர்வின் காரணமாக புவிச்சுழற்சியில் இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெற்றிருந்தது.
அதே போன்று கடந்த 2004 ம் ஆண்டு சுமாத்ராவில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக 6.8 மைக்ரோ செகண்டுகள் குறைவான வேகத்தில் புவிச்சுழற்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குர்ஆனில் முக்கியமான விடயங்களில் ஒன்றாகும் முஹம்மது நபிகளார் சொல்கின்ற உலக முடிவு நாள் பற்றிய குறிப்புகளில்

பெற்ற தாயை கவனிக்க கடமைப்பட்ட ஆண் பிள்ளைகள் தாயை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். அதனால் தாய் தனது மகளை சார்ந்து மகளின் தயவில் வாழும் நிலை ஏற்பட்டால்…(ஏற்பட்டிருக்கின்றது.)
 வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது…(ஆகியிருக்கின்றார்கள்).
 குடிசைகள் திடீர் திடீரென்று கோபுரமாக மாறினால்…(மாறியிருக்கின்றது)
 உலகில் விபச்சாரமும் மதுவும் பெருகினால்…
 தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதும் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் …(நடக்கின்றது)
 பாலைவனங்கள் சோலையானால்…(ஆம்)
 காலம் சுருங்கிவிடும் (முஹமது நபிகளார் தான் வாழ்ந்த காலத்தை உதாரணமாக சொல்லும் போது அதாவது இன்றைக்கு 1432 வருடத்திற்கு முன்பு “(இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். இன்றைய ஒருநாள் அன்று ஒருமணிநேரம் போல ஆகிவிடும். ஒரு மணி என்பது ஒரு வினாடி போன்று ஆகும்..(நடக்கிறது)
 கொலைகள் அதிகரிப்பதுவும்…(ஆம்)
 நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தால்…
 மனிதர்கள் பள்ளிவாசல்களை காட்டி என்னுடையது பெரிதா உன்னுடையது பெரிதா என்று சொல்லி பெருமையடிப்பது….(உண்மைதான்)
 கடைகள் பெருகுவது….(பெருகி விட்டது)
 பெண்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகரித்தல்..
 ஆடை அணிந்தும் நிர்வாணமாக தோற்றமளிக்கும் பெண்கள் உலகத்தில் தோன்றுவது…(உண்மைதானே)
 பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டுவது(அரசியல்வாதிகள் போன்றோர்) (திரட்டுகின்றார்கள்)
 தற்கொலை அதிகரித்தல்..(அதிகரித்திருக்கின்றது)
 தான் தான் இறைதூதர் என்றும் நபி என்றும் பொய் சொல்பவர்கள் அதிகரித்தல்….(மிக அதிகரித்து விட்டார்கள்)

ஓர் அரசு தனது சொந்த மக்களை விமாத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம் !

ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி தனது சொந்த மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார். அனைத்துக் குற்றங்களுக்கும் அவரே பொறுப்பு என்றும் கோடிட்டுள்ளார். இதனுடைய கருத்து கடாபி அனைத்து குற்றங்களையும் ஏற்று சதாம்உசேன் போல சர்வதேச நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் இன்னொரு விடயத்தையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தனது சொந்த நாட்டு மக்களின் மீது போர் விமானத்தை பாவிப்பதும் போர்க்குற்றமே என்ற செய்தியையும் தெளிவாகக் கோடுபோட்டுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சர் இத்தாக்குதல் பற்றிக் கூறும்போது இது தருணம், இது தேவை, இது கட்டாயம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். தற்போது ஐ.நாவை சரியான பாதையில் வளைத்து ஓர் உலக ஜனநாயக அணி வீறு கொண்டுள்ளது. இந்த அணி ஈழத்தமிழினத்திற்கு புதிய விடிவை வரைவு செய்யும் இலக்குவரை போகும் என்பது தமிழ் மக்கள் அறிய வேண்டிய விடயமாகும். சிறீலங்கா அரசு நாகர்கோயில் மகாவித்தியாலயத்தில் வீசிய விமானத்தாக்குதல் சர்வதேச போர்க் குற்றத்திற்குள் வருவதை இத்தருணம் உணர்த்தி நிற்கிறது. ஈழத் தமிழர் தமக்கான உரிமையை தெளிவாக வரையறை செய்து வெளிவர சிறந்த முன்னுதாரங்கள் தற்போது சர்வதேச அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ebook