தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாதப்பட்டியலில் மீண்டும் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம்
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தமது தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளின் 2011ம் ஆண்டு ஜனவரி 31இன் 83/2011 ஆம் இலக்க சட்டத்தின் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத பட்டியலில் 26 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமது உறுப்பு நாடுகளில் இவ் தீவிரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
'முதல்வர் மகாத்மா' படத்தில் பிரபாகரனை காந்தி சந்திப்பதாக காட்சி : சர்ச்சை
'முதல்வர் மகாத்மா' படத்தில் பிரபாகரனை காந்தி சந்திப்பதாக காட்சி : சர்ச்சை. 'முதல்வர் மகாத்மா' படத்தில் பிரபாகரனை காந்தி சந்திப்பதாக காட்சி : தணிக்கைக்குழு எதிர்ப்பு. முதல்வர் மகாத்மா என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. அ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே காமராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து காமராஜ் படத்தை எடுத்தவர்.
காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை கருவாக வைத்து முதல்வர் மகாத்மா படம் உருவாகியுள்ளது. இதில் காந்தியாக கனகராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை காந்தி சந்திப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியது. ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க முதல்-அமைச்சராக இருக்கும் காந்தி பிரபாகரனை சந்திக்க அழைப்பு விடுக்கிறார். இருவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றி விவாதித்து முடிவு எடுப்பது போன்று இக் காட்சிகள் உள்ளன. அப்போது பிரபாகரன் கையில் இருக்கும் துப்பாக்கியை காந்தியடிகள் வாங்கி பார்ப்பது போன்றும் காட்சி உள்ளது.
இந்த படம் நான்கு உறுப்பினர்களை கொண்ட தணிக்கைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் காந்தி பிரபாகரன் சந்திக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியாது என்று தடை விதித்தனர். இதையடுத்து பத்து உறுப்பினர்களை கொண்ட உயர் நிலை தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் படத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். விரைவில் இது ரிலீசாக உள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்த தயாராகும் தமிழகம்
தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தோழமை மையம் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்" எனும் தலைப்பிலான கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பெப்ரவரி 4 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பேராசிரியர் சரஸ்வதி அவர்கள் தலைமை தாங்க, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன், மருத்துவர் எழிலன், அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் உரையாற்றினர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், இணையவழி தனது வாழ்த்துரையை, தோழமை மையத்துக்கு வழங்கினார்.
தலைமை உரையாற்றிய பேரா.சரஸ்வதி அவர்கள், தோழமை மையம், நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக தளத்தையும் , அங்கீகாரத்தையும் இந்திய அளவிலும் அதற்கு அப்பால் உலகம் அளவிலும் பெறுவதற்காக பாடுபடும் என்றார்.
தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதன் செயற்பாடுகளையும் விளக்கினார்.
ஊடகவியலாளர் அய்யநாதன் அவர்கள் தனதுரையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு அங்கீகாரத்தின் முதல்படியாக, தெற்கு சூடானில் கிடைத்திருப்பது போல்;, இந்தியாவிலும் அதனைப் பெற நாம் போராடவேண்டும் என்று கூறினாhர்.
நிகழ்வின் சிறப்புரையாக அமைந்த தலைமை அமைச்சர் விசுவநாதன் உருத்திரகுமாரனின் உரையில், கட்சி அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து ஈழவிடுதலைப் போராட்டம் தனது இலட்சியத்தை அடைய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பல்படுத்த அனைவரும் அணிதிரள வேண்டும் என கூறியதோடு சிங்கள படைகளால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக் மீனவர்களின் சம்பவங்கள் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் தொடர்சியே என குறிப்பிட்டார்.
ஐரோப்பா, அமெரிக்கா, ஒஸ்றேலியா என பலநாடுகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுகளுக்கும் விரிவுபடு;த்தியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
ஜெர்மனி சரக்கு கப்பல் மோதி இந்திய போர்க்கப்பல் மூழ்கியது
ஜெர்மனி சரக்கு கப்பல் மோதியதில் இந்திய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியது. மும்பை துறைமுகம் அருகே இந்த விபத்து நடந்தது.
விபத்துக்குள்ளான ஜெர்மனி கப்பல் ஹம்பரீக் பகுதியின் "தி ஓஷன் லைனர் நோர்ட் லேக்" ஆகும். கடலில் மூழ்கிய இந்திய போர்க்கப்பலின் பெயர் வித்யா கிரி என்பதாகும்.
கப்பல் ஊழியர்கள் உட்பட 400 பேர் வித்யா கிரியில் பயணித்த போது விபத்து ஏற்பட்டது. கடற்படை தின கொண்டாட்டத்தையொட்டி, வித்யா கிரி கப்பலுக்கு வருகை தந்த குடும்பத்தினர் கப்பலில் இருந்தனர்.
ஜெர்மனி சரக்கு கப்பல் மோதியவுடன் வித்யா கிரி கப்பலின் பாய்லர் அறையில் துளை ஏற்பட்டதும் தீ பற்றியது. இந்த விபத்தை தொடர்ந்து கப்பலில் இருந்தவர்கள் அருகில் இருந்த கடற்கரைக்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கப்பல் தீயை அணைக்க முடியவில்லை. எனவே கப்பல் மூழ்கியது என மும்பை துறைமுக மண்டலத்தின் பொலிஸ் துணைகமிஷனர் தெரிவித்தார்.
இந்தியாவிற்கான கூகுளின் உபதலைவராக இலங்கைத் தமிழர்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
ராஜன் ஆனந்தனின் தந்தை வி.எஸ். குமார் ஆனந்தன் இலங்கையைச் சேர்ந்தவராவார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.
கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய நாடாக இந்தியா கருதுகின்றது. இந்தியாவின் இணையப்பாவனையாளர்களின் விதம் வருடாந்தம் 50% ஆக வளர்ந்து வருகின்றது.
கூகுளில் இணைவதற்கு முன்னர் ராஜன் ஆனந்தன் மைக்ரோசொப்ட், டெல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் குரல் வானொலி உருவாகியதன் பின்னணி - விக்கிலீக்ஸ்
2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் வானொலிச் சேவைக்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய நோர்வேயிடம் உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் தளத்தினை ஆதாரமாகக் காட்டி நோர்வேயின் அப்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் இந்த விபரம் இடம்பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
2002 டிசம்பர் 20ம் திகதியிடப்பட்ட இந்தத் தகவல் பரிமாற்றக் குறிப்பில், சிறிலங்கா அரசாங்கம் தமது தூதுரகத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்ததாக நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்பேர்க் எம்மிடம் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் ஒலிபரப்பு ஒழுங்குமுறையின் கீழ் செயற்படுவதற்கான இணக்கப்பாடு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கருவிகளை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நோர்வேயின் உதவியை நாட்டியது.
ஆயினும் இந்த உதவியை நேரடியாகப் புலிகளுக்கு செய்ய முடியாது என்றும் சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்திடமே வழங்க முடியும் என்றும் நோர்வே கூறியது.
இந்தக் கருவிகள் கப்பல் மூலம் கொழும்புத் துறைமுகத்துக்கு ஒரு கொள்கலனில் கொண்டு வரப்பட்டன.
நோர்வே தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட இந்தக் கொள்கலன் சுங்கவரி செலுத்தப்படாமலேயே கொண்டு செல்லப்பட்டது.
நோர்வே தூதுரகம் இதை சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்திடம் கையளிக்க, பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் புலிகளுக்கு அனுப்பப்பட்டது.
புலிகளின் குரல் வானாலியை சட்டபூர்வமானதாக்கும் நோக்கிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது புலிகளின் குரல் வானொலி குறைந்த சக்தி கொண்ட பண்பலை ஒலிபரப்பையே மேற்கொண்டு வந்தது.
புதிதாகப் பெற்ற கருவிகளின் மூலம் புலிகளின் குரல் வானொலியை வடக்கு,கிழக்குப் பகுதிகளில் செவிமடுக்க முடியும்.
இந்த ஒலிபரப்புக் கருவிகளின் பெறுமதி சுமார் 90 ஆயிரம் டொலர் என்றும் அவை சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை இந்திய அரசாங்கம் இந்தக் கருவிகளைக் கொண்டு தமிழ்நாடு வரை புலிகள் தமது ஒலிபரப்பை மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசிடம் கவலை தெரிவித்தது.
புதிய கருவிகளின் தூரவீச்சுத் தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லை.
இந்த விவகாரம் வெளியான போது சிறிலங்கா அரசுக்கு ஜேவிபி கடும் கண்டனத்தை வெளியிட்டது.“ என்றும் அந்தத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
ஐரோ. ஒன்றியம், பயங்கரவாத பட்டியலில் இருந்து வி. புலிகளை நீக்கக் கோரும், வெகுசனப் போராட்டம்
ஐரோப்பிய தமிழ் சமூகத்தின் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியம், தனது பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கக் கோரும், வெகுசனப் போராட்ட முன்னெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 சனவரி) தமிழர் நடுவம் - பிரான்சினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
சமீபத்தில் மறைந்த ஊடகவியாலாளர் சுப்பிரமணியம் சிவநாயகம் ஐயா அவர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் என பன்முகத் தளத்தில் இருந்து பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆறுமாதத்திற்கு ஒரு தடவை, ஐரோப்பிய ஒன்றியத்தினால் புதுப்பிக்கப்பட்டு வரும் பயங்கரவாத பட்டியல் தொடர்பிலான முடிவினை கருத்தில் கொண்டு, எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர், இந்த வெகுசன போராட்டத்தின் மக்கள் கையொப்பங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்படைப்பதென்றும், தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் இதனை முன்னெடுப்பதென்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் பீடத்தால் முன்வைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தங்களது முழுமையான உறுதுணையை வழங்குவதோடு, அதனுடைய செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதெனவும் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழீழம் அமைக்க உலகநாடுகள் உதவவேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம்
இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் நேற்று தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களின் விவரம்:
அன்னைத் தமிழையும் அருந்தமிழ் இனத்தையும் ஆதித்தமிழ் மண்ணையும் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும், முதல் மொழிப்போர் தொடங்கிய காலமான 1938 லிருந்து இதுவரையிலும் தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளெங்கிலும் அரசியல், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பாடாற்றித் தம்வாழ்வை ஈகம் செய்த அனைத்துச் சான்றோருக்கும், அற வழியிலும் ஆயுத வழியிலும் போராடி களப்பலியான தமிழகத்தைச் சார்ந்த கரும்புலி முத்துக்குமார் உள்ளிட்ட போராளிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போரில் உயிரீந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
அத்துடன், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், போன்ற மாமனிதர்களின் மகத்தான கொள்கை வழியில், தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் தீண்டாமை உள்ளிட்ட இந்துத்துவ வன்கொடுமைகளை எதிர்த்து, சாதி ஒழிப்புக் களத்தில் போராடிக் களப்பலியான சாதி ஒழிப்புப் போராளிகள் அனைவருக்கும் இம்மாநாட்டில் திரண்டிருக்கும் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று நடந்த ஆழிப்பேரலையின் தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் இந்நேரத்தில் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் அல்லது மதவழி தேசியத்தின் அடிப்படையில் தமக்கான நாடு மற்றும் அரசை உருவாக்கி தம்மைத்தாமே ஆட்சி செய்து கொள்ளும் இறையாண்மையைப் பெற்றுள்ளது. மேலும் பல தேசிய இனங்கள் புதிது புதிதான தேசங்களையும், அரசுகளையும் உருவாக்கி தத்தமது இறையாண்மையென்னும் தன்னாட்சி உரிமைகளை வென்றெடுத்து வருகின்றன.
இந்நிலையில் உலகமெங்கும் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் தொகையைக்கொண்ட உலகின் மூத்தகுடியும் முதல் குடியுமான தமிழ்க்குடி மக்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலர வேண்டுமென்றும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதமில்லா அறவழியிலும் ஆயுதமேந்திய அறவழியிலும் தமிழீழ விடுதலைப்போர் நடந்து வருகிறது.
அப்போர், தற்போதைய சூழலில் இடைக்காலமாக ஒரு பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அது முற்றும் முழுதாக முடிந்து விட்ட ஒன்றல்ல! ஏனெனில், அது வெறும் மண்மீட்புப் போர் அல்ல ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை மீட்சிக்கான போர்! ஏற்கனவே நாடு, அரசு, ஆட்சி என்னும் கட்டமைப்புக்களைக் கொண்ட இறையாண்மையையுடைய ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம், இழந்து போன இறையாண்மையை வென்றெடுக்கவே இன்று இந்த விடுதலைப் போரை நடத்தி வருகிறது.
எனவே தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றத் தேவைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை, அனைத்துலகச் சமூகம் முதலில் கொள்கையளவில் இசைந்தேற்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! ஆயுதப்போராட்ட வடிவம் அங்கே இடைக்காலமாக அழித்தொழிக்கப்பட்டாலும், விடுதலைப் போரட்டத்திற்கான தேவைகளும் காரணங்களும் அழித்தொழிக்க முடியாதவைகளாக உள்ளன.
எனவே, இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து அனைத்து வழிகளிலும் போராடித் தனித் தமிழ் ஈழ அரசை நடத்தி வந்த ஈழத் தமிழர்களின் இறையாண்மையினையும், அதன் வெளிப்பாடான தமிழ் ஈழ அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க தவறிவிட்டன.
வல்லரசிய நலன்களைக் கருத்தில்கொண்டு, உலக நாடுகளால் ஈழ அரசு அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது என்பது ஐ.நா.பேரவை தேசிய இனங்களுக்கு வழங்கியுள்ள அரசியல் பாதுகாப்பை மீறிய செயலாகும். உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 38 நாடுகளை, உறுப்பு நாடுகளாக ஐ.நா.பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 14 தீவு நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக அய்.நா.பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்தி அய்.நா.பேரவைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு தமிழக மற்றும் இந்திய அரசுகளுக்கும், உலகத் தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழீழ மக்களின் பூர்வீகத் தாயகமான இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளில், நிலையான சிங்களப்படை முகாம்களை நிறுவியும், படையினரின் குடும்பத்தினர் என்ற பெயரில் சிங்களர்களை வெகுவாக குடியேற்றம் செய்தும், ஊர்கள், நகரங்கள், வீதிகள், என யாவற்றின் தமிழ்ப் பெயர்களையும் அகற்றி சிங்களப் பெயர்களைச் சூட்டியும், ஒட்டு மொத்த தமிழீழத்தையும் சிங்கள-பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் சிங்கள இன வெறியர்கள்!
தமிழீழத்தை ஆக்கிரமிக்கும் இந்தக் கொடூரப்போக்கைத் தடுத்து நிறுத்தவும் அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் பேரவை மற்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் உடனடியாக முன்வரவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
நாடுகளுக்கிடையில் நடக்கும் போர்களாக இருந்தாலும் ஒரு நாட்டுக்குள்ளேயே நடக்கும் உள்நாட்டுப் போர்களாக இருந்தாலும், அப்போரின் போது எத்தகைய மரபுகளை அல்லது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அனைத்துலக நாடுகளுக்கிடையே சில வரையறைகள் உள்ளன.
பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீதும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள் போன்றவர்களின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பதும், பொதுமக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் சதிநோக்கில் அதிஉயர் நச்சுவகைப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதும், உயிருடன் பிடிபடும் போராளிகளைக் கையாளுவதாக இருந்தாலும் போராளிகளின் இறந்த உடல்களைக் கையாளுவதாக இருந்தாலும் மனித உரிமைகளை மீறக்கூடாது என்பதும் போர்க்களத்தில் பின்பற்ற வேண்டிய மரபுகளாகும்.
ஆனால், அத்தகைய போர் மரபுகள் எதனையும் மதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக ஈவிரக்கமில்லாமல் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சவையும் ராஜபக்சவின் சகோதரர்களையும், இன்னும் பிற சிங்கள இனவெறிக் கும்பலையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து அனைத்துலக நீதிமன்றத்தின் போர்க்குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கிட ஐ.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளையும், புலிகள் என்ற ஐயத்தின் பெயரில் அப்பாவி இளைஞர் மற்றும் இளம்பெண்களையும் போர்க்கைதிகளாகக் கைது செய்து இருட்டுச் சிறைகளில் அடைத்து விசாரணைகள் ஏதுமின்றி மாந்தநேயமற்ற முறையில் சொல்லொணாக் கொடுமைகளை சிங்கள இன வெறி அரசு ஒவ்வொரு நாளும் அரங்கேற்றி வருகிறது.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அரச பயங்கரவாதப் போக்கைத்தடுத்து நிறுத்தி, இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் சட்டப்பூர்வமாக விசாரிக்கவும், போர்க்கைதிகளுக்கான மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 லட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து விடுவிக்கப்பட்ட மக்களும் கூட தமது சொந்த வாழிடங்களை இழந்து விட்டதுடன், உடைமைகள் மற்றும் உடனுறை உயிர்களையும் பறிகொடுத்ததனால் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அம்மக்களுக்கு மீள்வாழ்வு அளிக்கும் வகையில் 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான" பணிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை, கொத்தடிமைகளின் வாழ்க்கையை விட மிகுந்த வேதனைக்குரியதாகவுள்ளது. தங்குமிடம், குடிநீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இன்றி அல்லல்படும் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறைகளும் அகதிகளுக்கான ஐ.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திடாத நிலைப்பாடுமே காரணங்களாகும். எனவே, இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதுடன், அகதிகளுக்கான ஐ.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.
ஈழத்தமிழினத்தின் ஒற்றைப் பாதுகாவல் அரணாகவும் ஆயுதமாகவும் விளங்குகிற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மகத்தான விடுதலை இயக்கமாகும். வெகுமக்களின் பேராதரவோடும் பங்களிப்போடும் ஆட்சி நிர்வாகக் கூட்டமைப்புடன் கூடிய ஒரு தனி அரசையே நிறுவி, ஆட்சி நடத்திய ஒரு பேரியக்கமாகும். ஆனால், அமெரிக்க வல்லரசின் ஒருங்கிணைப்பில் அனைத்துலகப் பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தி, அவ்வியக்கத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது.
போர் மரபுகளை மீறாமல், சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தாமல் சிங்களப்படையினரோடு மட்டுமே போர் நடத்திய-நடத்தி வருகிற தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு வெகுமக்கள் இயக்கமாக இசைந்தேற்பு செய்து, அதன் மீதான அனைத்துலகத் தடைகளை நீக்க வேண்டுமென்று, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்குரிய சராசரி கால அளவையும் தாண்டி, ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட அனைத்து தண்டனைக் கைதிகளையும், கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இன்னபிற வழக்குகளிலும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து வரும் இஸ்லாமியர் உள்ளிட்ட தண்டனைக்கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.
அத்துடன், எந்த விசாரணையுமில்லாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைச் சிறையில் சிக்கி வாடும் தமிழக, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியர்களை இந்திய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, அனைவரையும் உடனே இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானங்கள் கூறுகின்றன.
புலிகளின் தாக்குதல் குழுவொன்று இலங்கைக்குள் ஊடுருவல்? பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்? - சிங்கள ஊடகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் கும்பலொன்று இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் அக்குழு இலங்கையின் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் சந்தேகித்து, இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ரிவிர, லக்பிம ஆகிய சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த விடுதலைப்புலிகளின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தக் குழு இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரபுக்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு றோ உளவுப் பிரிவு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் சூழ்ச்சித் திட்டம் அம்பலமாகியதனைத் தொடர்ந்து, குறித்த கும்பல் இலங்கைக்குள் பிரவேசித்திருக்கலாம் என றோ உளவுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பெருமளவிலான இலங்கை அகதிகள் நாடு திரும்பி வரும் சந்தர்ப்பத்தில், அகதிகள் என்ற போர்வையில் இவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைப் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த புதிய முயற்சியை முறியடிக்கும் நோக்கில் மேற்குலக நாடுகளின் தூதுவராலயங்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்னர்.
இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய புலிகள் சூழ்ச்சித் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இழக்கப்படுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சூழ்ச்சித் திட்டமே பிரதான காரணி என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை போர்க் குற்றச் செயல் தொடர்பான, பான் கீ மூனின் ஆலோசனைக் குழு ஏதேனும் காரணங்களுக்காக சில வேளைகளில் இலங்கைக்கு விஜயம் செய்தால், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஏற்கனவே திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது அரசியல் நலன்களுக்காக பாவித்து, புலிகளைச் சாட்டாக வைத்தே காலத்தை கடத்தப்போகின்றது அரசாங்கம். அதற்கான உத்தியே புலிகளின் மீள் எழுச்சிக்கான கட்டுக்கதைகள் என புலம்பெயர் ஆய்வாளர்கள் வர்ணித்திருக்கின்றனர்.
ராஜபக்சவிடம் நேபாளம் உதவி கோரியதாக வெளியான பொய்த் தகவலுக்கு மன்னிப்புக் கேட்டது இலங்கை
நேபாளத்தில் அமைதி ஏற்படுத்த ராஜபக்சவிடம் நேபாளம் உதவி கோரப்பட்டதாக வெளியான பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை. இலங்கை வெளியுறவுத் துறை இணையமைச்சர் நியோமல் பெரேரா, நேபாளத்திடம் மன்னிப்பு கோரியதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நேபாளம் சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபரை நாமல் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள அதிபர் ராம்பரன், தமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சவை பீஜிங்கில் சந்தித்தபோது கேட்டுக்கொண்டார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரீஸ் முன்பு கூறியிருந்தார்.
தற்போது அவரது கூற்றுக்காக வெளியுறவுத்துறை இணையமைச்சர் நேபாளத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும், மன்னிப்பு கேட்கப்பட்ட தகவலை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை அமைச்சர் தரப்பில் நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுத்தாராம். ஆனால் அதையும் மீறி செய்தி கசிந்துவிட்டது.
ஈழத்தமிழர்கள் மேல் சடுதியான பாசமழை! - ராகுல் காந்தியின் ஓநாய் அழுகை?
இன்றைய பரபரப்பூட்டும் ஈழத் தமிழர்களின் செய்தியில் ராகுல் காந்தி ஈழத்தமிழர்கள் மேல் காட்டும் ஒரு விதமான அக்கறை குத்தியுரைக்கும் செய்தியாக மாறியுள்ளது. ராகுல் காந்தியின் பாசமழை பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கலாம். ராகுல் காந்தி சார்ந்த அரசியல் பார்வை இப்படி அமைகிறது.
ஈழத்தமிழர்களின் துன்பியல்கள் பல தேசங்களின் அரசியல் காய் நகர்த்தல்களாக அமைவது ஒன்றும் விசித்திரமில்லை. எதிர்காலங்களில் இலங்கை அரசியல் நிலையை விட இந்திய அரசியல் நிலையில் தான் மிகுந்த தாக்கத்தை செலுத்தப்போகின்றதென்பது அரசியல் அவதானிகளின் கருத்து.
ராகுல் காந்தி எடுக்கும் நிலைப்பாடு வெறுமனே ஒரு காந்தி குடும்பத்தின் முடிவாக இருக்க முடியாது. ஏறத்தாழ முழு இந்தியாவையும் நோக்கிய கருத்தாக அமையும். ஒரு குறிக்கப்பட்ட சில மாத காலங்களின் முன்னதாக தந்தையான ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதியாக இருக்கும் நளினி போன்றோரின் விடுதலைக்கு முழு எதிர்ப்பையும் வெளிப்படுத்தியவர் ராகுல் காந்தி என்பதை மீள்நினைவில் கொள்வோம்.
ஈழத்தமிழர்கள் மேல் ராகுல் காந்தி கொண்ட சடுதியான அக்கறை ஒரு 'அந்தர் பல்டியாக' இருந்தாலும் கூட அதை ஈழத்தமிழர்கள் நலனுக்கு சார்பாக எவ்வாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய சவால்.
தமிழ்நாடு, இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. டெல்லி அரசு தமிழ்நாட்டு அரசியலுடன் ஒரு சாதகமான உடன்பாட்டை ஏற்படுத்தாத பட்சத்தில் அதன் ஆயுட்காலத்தை நீடிப்பதென்பது இயலாத காரியம்.
தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிலைப்பாட்டை அவதானிக்கும் போது, தி. மு. கவின் அரசியல் அகவை திரு மு. கருணாநிதியோடு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. முதலமைச்சர் கருணாநிதியின் அரசியல் யாத்திரை முற்றுப்பெறும் பட்சத்தில் உள்வீட்டுச் சண்டைகளாக (அழகிரி, கனிமொழி, ஸ்டாலின்) மாறி இறுதியில் தமிழ்நாட்டின் அரசியல் பொதுச் சந்தையில் வந்து நிற்கும். அப்போது ஈழத்தமிழர்களின் அனர்த்தங்களும், புலிகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடும் கருப்பொருளாக இருக்கும்.
அந்த வேளையில் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக நின்ற தமிழர் அமைப்புகளை அரியணை ஏற்றுவதற்காக தமிழ்நாட்டு மக்கள் முண்டியடிப்பார்கள். இந்த நிலையில் சீமான், கொளத்தூர் மணி, ராமதாஸ், வைகோ போன்றோர்களின் கூட்டு மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும்.
கலைஞர் கருணாநிதியைப் பொறுத்தவரையில் அடுத்த தேர்தல் வரை தனக்கொரு சாதகமான நிலை ஏற்படாதென காங்கிரஸ் கட்சி நினைத்திருக்கலாம். இதற்கு ஒரு இணைப்பாளராக சோனியாவையோ அல்லது மன்மோகன் சிங்கையோ நியமிப்பது தமிழ்நாட்டு மக்களை திருப்திப் படுத்தாது. இதற்கு அடுத்த நிலையில் உள்ளவராக ராகுல் காந்தியை பொருத்தமானவராக சிந்தித்திருக்கலாம். அதற்கு பிறிதொரு காரணமாக அவரது எதிர்கால பிரதமர் பதவியையும் காங்கிரஸ்காரர் கருத்தில் கொண்டிருக்கலாம். இது ஒன்றும் பிழையானதல்ல. அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா.
தி. மு. கவின் சரிவின் பின்னர் கோலோச்சப் போவது ஈழத்தமிழர் சார்பான கூட்டணியே. ஆகவே ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை காட்டுவதுபோன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி இப்போதே மேற்கொள்ளுகிறது. ஒருவேளை எதிர்காலத்தில் இந்த கூட்டணியை கைப்பற்றுவதற்கான திட்டமாகக் கூட இருக்கலாம்.
அரசியலைப் பொறுத்தவரையில் நிலைப்பாடுகள் மாறுவதென்பது நிமிடக் கணக்குகளுக்குள் உள்ளது. இதனை ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக எப்படி மாற்றவேண்டும் என்பதுதான் அனைவருக்கும் முன்னாலுள்ள சாணக்கியத்துக்கான சவாலாகும். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஆயுதப் போராட்டம் ஒய்வடைந்த நிலையிலும், ஜனநாயக (தர்ம) யுத்தம் ஓங்கிய நிலையிலும் இருப்பதைக் காணலாம். 'ஜனாதிபதி மகிந்தாவின் இங்கிலாந்து வருகையும் செல்கையும்' என்பது தமிழர்களின் மாபெரும் வெற்றியை சர்வதேசத்திற்கு கூறியதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
இதே போன்று சாணக்கியமாக சிந்தித்து இராகுல் காந்தியின் 'ஓநாய் அழுகையை' ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்ளல் வேண்டும். டெல்லி நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு, இலங்கை அரசு ஏற்படுத்திய கொடுமைகளை பட்டவர்த்தனமாக கூறுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு அரசியல் சக்தி இருக்குமானால் ஈழத்தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் பாதிவழியை அடைந்ததாகும். குறிப்பாக இந்திய தமிழ்நாட்டின் அசைவு, இலங்கை அரசியலிலும் அதிர்வை தெறிக்கச் செய்யும் என்பதை மறந்துவிடல் ஆகாது.
சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் மரண அச்சுறுத்தல்
இலங்கை இராணுவத்தின் மூலமாக சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
ரொய்ட்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்பாளர் தினுக லியனவத்த, பிரான்சின் (ஏ.எப்.பி) செய்திச் சேவையின் எரங்க ஜயவர்த்தன ஆகிய ஊடகவியலாளர்களே இராணுவத்தினரால் மரண அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 15ம் திகதி இராணுவத் தளபதியின் தலைமையில் நடைபெற்ற கவசப்படையணியின் 55வது வருட நிறைவுக் கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த சம்பவமொன்றே அதற்கான ஏதுவாகியுள்ளது.
பிரஸ்தாப வைபவத்தின் இராணுவ அணிவகுப்பின் நடைபெற்ற போது இராணுவ வீரரொருவர் மயங்கி விழுந்துள்ளார். அதனை அவர்கள் இருவரும் படம்பிடித்துள்ளனர்.
அப்புகைப்படம் ஊடகங்களில் வெளியானது இராணுவத்தின் கீர்த்தியைப் பாதிக்கும் என்பதாக குறிப்பிட்டு இராணுவ ஊடகப் பிரிவின் மேஜர் மஹிந்த என்பவரே குறித்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுமளவுக்கு காரணியாக அமைந்த புகைப்படம் கீழே தரப்படுகின்றது.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக 1100 முறைப்பாடுகள் ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து மின் அஞ்சல் மற்றும் விரைவுத் தபால் மூலம் 1100 முறைப்பாடுகள் ஐ.நா.விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நோர்வே, பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான மின் அஞ்சல் முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படாத ஆவணங்களை ஐ.நா.நிபுணர் குழு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கமும், படையினரும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போலியானவை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இவ்வாறான போலியான ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் திவயின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பொன்சேகா வருகின்றமையை விரும்பிய அமெரிக்கா!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வின் வெற்றியையே அமெரிக்கா விரும்பி உள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் PATRICIA A. BUTENIS கடந்த ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்த ஆவணம் ஒன்றில் இருந்து இது அம்பலமாகி உள்ளது.
விக்கிலீக்ஸ் இணையத்தளம் இந்த ஆவணத்தை வெளிவிட்டு உள்ளது. இதில் பொன்சேகாவுக்கும், பொன்சேகாவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கின்றார் அமெரிக்க தூதுவர்.
மனித உரிமைகள், அகதிகள், அரசியல் இணக்கப்பாடு,யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொன்சேகா வழங்கி உள்ளார் என்றும் பொன்சேகாவின் அரசு ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ராஜபக்ஸ அரசை விட இவ்விடயங்களில் மிகவும் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்க முடியும் என்றும் தூதுவர் குறிப்பிட்டு உள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கவில்லை ; 2ஜி விவகாரத்தில் தொடர்பில்லை! ஜெகத்கஸ்பர்
2ஜி முறைகேடுக்கும் தமிழ் மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, சந்தேகத்தின் பேரிலேயே சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது' என்று பாதிரியார் கூறினார்.
தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் பாதிரியார் ஜெகத் கஸ்பார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’சி.பி.ஐ. தமிழ் மையம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணி முதல் தேடுதல் நடத்தியது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்ததாக பேசப்படும் ஊழல் பணம் தமிழ் மையத்திற்கும் வந்ததா என்பதை அறியவே இத்தேடுதல் என என்னிடம் கூறப்பட்டது. 2ஜி அலைக்கற்றை சர்ச்சைகளுக்கும் தமிழ் மையத்திற்கும், அதன் நிர்வாக அறங்காவலரான எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
எங்கள் மீது அத்தகைய ஐயப்பாடுகளை எழுப்புவது அபாண்டமானது. தமிழ் மையத்தின் வரவு-செலவு கணக்குகள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டவை. தமிழ் மையத்தின் நிகழ்ச்சிகள் தொழில், வர்த்தகத்துறை புரவலர்களின் உதவியோடு நடப்பவை.
இந்த பணத்தை காசோலையாக மட்டுமே பெறுகிறோம். எங்களது கணக்குகள் நேர்மையானது, வெளிப்படையானது. சென்னை சங்கமம், சென்னை மாரத்தான் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். அரசியல்வாதிகளோடு இணைந்து செயல்படுகின்ற ஒரே காரணத்திற்காக சந்தேகப்படுவது அநீதியானது.
சி.பி.ஐ. தேடுதல் வேட்டை நடத்தியதில் எங்களுக்கு கவலையில்லை என்றாலும், மக்கள் மத்தியில் ஏதாவது நடந்திருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் எங்களுக்கு கவலை அளிக்கிறது. அதற்காகவே யாருடைய தூண்டுதலும் இல்லாமல் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
கனிமொழி எம்.பி.யுடன் நல்ல காரியங்களுக்காக இணைந்து இயங்குவதை மதிக்கிறோம். சென்னை சங்கமத்தை உருவாக்கியதில் அவரது தலைமை சிறப்பானது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அவர் தமிழ் மையத்தில் அறங்காவலராக இணைந்தவர்.
அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்துவதில் எந்த தவறும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடனும் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துவோம். அரசியல்வாதிகளில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பது என் வேலை அல்ல.
குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியவருடன் இணைந்து பணியாற்றுவதுதான் தவறு. சி.பி.ஐ. தேடுதலுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு நல்கினோம். அவர்களும் கண்ணியத்தோடு நடத்தினார்கள்.
2004-ம் ஆண்டு முதல் எங்கள் கணக்கு விவரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களது சீரிய அணுகுமுறையிலும், அதைவிட எங்களது சரியான செயல்பாட்டிலும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.
சி.பி.ஐ. தேடுதலை பயன்படுத்தி சோ, சுப்பிரமணியசாமி ஆகியோர் 2ஜி அலைக்கற்றை பணம் தமிழ் மையம் வழியாக விடுதலைப்புலிகளுக்கு சென்றிருக்கலாம் என்பது போல பேசி வருகிறார்கள். அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
விடுதலைப்புலிகளுக்கு ஒருபோதும் நிதி வழங்கியது இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆதரவு குரல் கொடுத்திருக்கிறேன்.
தமிழ் மக்களுக்கான எங்களது நற்பணிகளை முடக்க திட்டமிட்டு செய்துவரும் இதுபோன்ற பிரசாரங்கள், எங்கள் பணிகளை மேலும் வலுப்படுத்துமேயன்றி தளர்த்தாது. தமிழ் மையத்தின் நிலையான நிதி ரூ.1 கோடி. மற்ற சொத்துக்கள் எதுவும் கிடையாது.
மக்களின் நன்மதிப்பு தான் எங்கள் சொத்து. முதல் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்தபோது பலரும் உதவியது போல கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் ரூ.3 லட்சம் வழங்கியிருக்கிறார்கள்’’என்று தெரிவித்தார்.
போர்க்குற்ற முறைப்பாடுகளை நிபுணர் குழுவுக்கு சமர்ப்பிக்கும் இறுதிதினம் இன்றாகும் - இன்னர் சிற்றி பிரஸ்
இலங்கையின் போர்க்குற்றங்களை ஆராயும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழு முறைப்பாடுகளை ஏற்று கொள்ளும் இறுதி தினம் இன்றாகும்.
இந்தநிலையில் இந்த நிபுணர் குழு எப்போது தமது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளிக்கும் என நேற்றைய ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பட்டுள்ளது.
இன்னர் சிற்றி பிரஸ் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. பான் கீ மூனின் நிபுணர் குழு தமது விசாரணைகளை ஆரம்பித்த திகதி, மற்றும் அதன் விசாரணை முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தற்போது விடுமுறைக்காலம் ஆரம்பமாகவுள்ளமையால் முறைப்பாடுகளின் முடிவில் நிபுணர் குழு பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைக்கு தாமதம் ஏற்படுமா? என்ற கேள்வியையும் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பியது
இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கி, நிபுணர் குழு தமது பணிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்து முடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இராஜதந்திர விடயங்கள் உள்ளடங்கியுள்ளமையால், கவனமான செயற்பாடு அவசியம் எனக்குறிப்பிட்ட அவர், நிபுணர் குழுவின் முறைப்பாடுகளை பெறும் காலம் இன்று முடிவடைவது தொடர்பாகவும் அது அறிக்கை சமர்ப்பிக்கும் தினம் தொடர்பாகவும் அறிந்து கூறுவதாக நெசர்கி குறிப்பிட்டுள்ளார்
NAAMTAMILARIN MAAVEERAR NAAL VEERAVANAKKAM 2010
நாம் தமிழரின் மாவீரர் நாள் வீரவணக்கம் 2010
அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது
வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பாவிலிருந்து தொலைபேசியில் உரையாடிய நண்பன் ஒருவன் இணைப்பை துண்டிக்கும் முன் கூறிய இறுதி வாக்கியம் எனது நித்திரையை தொலைத்து விட்டிருந்தது. அது ‘பாலாண்ணையின் நினைவு நாள் வருகுது”. அந்த வரிகள் மன அடுக்குகளில் ஆழமாக உள்ளிறங்கி எண்ணற்ற நினைவலைகளை உருவாக்கிவிட்டிருந்தன. இந்த எண்ணவோட்டத்துடன் கடல் அலைகளை பார்க்கும் போது அவையும் பாலாண்ணையின் நினைவுகளையே கரையை நோக்கி எடுத்துவருவது போல் ஒரு பிரம்மை… என் வாழ்நாளின் நிம்மதியற்ற இரவுகளில் அதுவும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது.
இரண்டு வருடங்கள். போராட்டத்தின் தாங்கு தூண்களில் ஒன்றும் அதன் இயங்கு சக்திகளின் மையமுமாகிய ஒருவர் இல்லாமலேயே கடந்து விட்ட காலங்கள் இவை. ஒரு வகையில் கொடுமையான நாட்கள்.
காலம் என்பது பல நினைவுகளை தின்று செரித்துவிடக்கூடியது. ஆனால் சில இழப்புக்களும் பிரிவுகளும் காலத்தால் தின்று தீர்த்துவிட முடியாதவை. கால உடைப்பில் சிதறுண்டு போகாத அத்தகைய ஒரு பேரிழப்புத்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடையது. அவரின் இழப்பினூடாக விழுந்த வெற்றிடம் என்றுமே இட்டு நிரப்பப்பட முடியாதது. ஆனால் நிரப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அந்த வெற்றிடம் அப்படியே வெறுமையாகவே கிடக்கிறது.
போராட்டம் மிக முக்கியமான வரலாற்றுக் கால எல்லைக்குள் பிரவேசித்திருக்கிற தருணம். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவர் இல்லையே என்ற ஏக்கமும் கவலையும் இயல்பாகவே தொண்டைக்குள் வந்து பந்தாய் அடைத்துக் கொள்கிறது. பாலசிங்கத்திற்கான நினைவுக்குறிப்பாய் இந்த பத்தியை எழுதி முடிக்கலாம். ஆனால் அவருக்கான உண்மையான அஞ்சலியும் நினைவும் அதில் தங்கியிருக்கவில்லை.
அவர் தன் வாழ் நாளில் எத்தகைய பணியை மேற்கொண்டிருந்தார். அது இன்று எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பதை ஆராய்வதும் அதிலுள்ள தேக்கங்களைக் கண்டடைந்து அதைக் களைய முற்படுவதும்தான் நாம் அவருக்குச் செய்யும் நிஜமான அஞ்சலியாகும். இதையொட்டி இந்தப் பத்தியினூடாக பன்முக ஆளுமை கொண்ட அவரது பணியின் ஒரு சிறு பகுதியை விளங்கிக் கொள்ள முற்படுவோம்.
இக் கட்டுரையின் தலைப்பு frantz fanon இன் wretched of earth நூலுக்கு jean paul satreஎழுதிய முன்னுரையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராட்ட வடிவங்களை விபரிக்கும் frantz fanon இன் இந்நூல் உலகப் பிரசித்தி பெற்றது. அதைவிடப் பிரசித்தம் அந்நூலுக்கு satre எழுதிய முன்னுரை. உலக வரலாற்றிலேயே நூலின் உள்ளடக்கத்திற்கு நிகராக எதிர்வினையை எதிர்கொண்டதும் சிலாகிக்கப்பட்டதும் அனேகமாக சர்த்தரின் இந்த முன்னுரையாகத்தான் இருக்க முடியும்.
‘நீதி என்பது அரசின் வன்முறை, வன்முறை என்பது மக்களின் நீதி” என்ற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒடுக்கப்ட்டவர்களின் விடுதலையின் அடிநாதமாக இருக்கும் வன்முறையை சிலாக்கிக்கும் கசயவெண frantz fanon இன் நூலுக்கு முன்னுரை எழுதப்புகும் ளயசவசந பல படிகள் மேலேபோய் வன்முறையின் உச்சமாக நிகழும் பயங்கரவாதத்தை தூக்கிப்பிடிக்கிறார். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் sartre ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். பிரெஞ்சு வேர்ச் சொல்லிலிருந்து பிரித்தெடுத்து “terror” என்ற வார்த்தைக்கு ஒரு புதிய வியாக்கியானத்தை வழங்கியவர் சர்த்தார்.
சர்தாரினதும் பனானினதும் வியாக்கியானப்படி அரசின் வன்முறைக்குள்ளாகி ஒடுக்கப்பட்டு அடக்கப்படும் ஒரு இனத்திலிருந்து அந்த அடக்குமுறைக்குள்ளிருந்தே திமிறியெழுந்து வன்முறையின் துதிபாடியபடி வரலாறு ஒன்று மேலெழும் என்பது ஒரு கோட்பாடாகக் கட்டவிழ்கிறது. அப்போது அந்த வரலாற்றின் மீது பேரொளி ஒன்று வந்து குவிகின்றது. அப்போது ஒடுக்கப்பட்ட அந்த இனம் மட்டுமல்ல எதிரிகள் உட்பட ஒட்டுமொத்த உலகமுமே அந்த வரலாற்றுப் பேரொளியின் தரிசனத்தைக் காண்கிறார்கள். அது ஒரு முடிவிலி. அந்த இனத்தின் வரலாறாகவும் வழிகாட்டியாகவும் அது இயங்கிக் கொண்டேயிருக்கும். வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல் விதி. தமிழினத்தின் இயங்கியலும் வரலாறும் யார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
கால நீரோட்டத்தில் தமிழினத்தின் இயங்கியலையும் வரலாற்றையும் இனங்கண்டு அதனோடு இணைந்து இசைந்து அந்த வரலாற்றினது ‘குரல்” ஆக பரிமாண மாற்றமடைந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஒரு வகையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அந்த இயங்கியல் வரலாற்றினுள் வெடித்துக் கிளம்பியவர் என்றுதான் தற்போது தோன்றுகிறது.
காலனியாதிக்கத்திற்கெதிராக தனது வாழ்வின் இறுதிவரை போராடிய கறுப்பின வீரரான பிரான்ஸ் பனானை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை சர்த்தாரையே சாரும். இருவரும் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல பனான் இறந்த பிற்பாடும் அவரது கோட்பாடுகளை – கொள்கைகளை உலகிற்கு கொண்டு சேர்த்த பெருமையும் சர்த்தாரையே சாரும். அதன் அடையாளம் தான் jean paul satre தொகுத்த frantz fanonஇன் wretched of earth நூல்.
கால வெளியில் வைத்து யோசித்துப் பார்க்கும் போது ஒரு கோணத்தில் பனானுக்கு ஒரு சர்த்தார் போல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு அன்ரன் பாலசிங்கம் என்று இப்போது புரிகிறது. வரலாறு என்பது எவ்வளவு அற்புதமானது. சும்மாவா சொன்னான் ஜெர்மானிய தத்துவக் கிழவன் கேகல் (hegal) ‘வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும்” என்று…
“war and terror” என்ற பெருங்கதையாடல்களுடன் ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்” புரியக் கிளம்பியிருக்கும் மேற்குலக வல்லரசுகளின் ஒற்றை அறத்தையும் நீதியையும் இன்று எதிர்கொள்ள எம்முடன் பனானும், சர்த்தாரும் இல்லாமல் போனது ஒரு வகையில் துரதிர்ஸ்டவசமானதுதான். இதை ஒரு வகையான காலக்குழப்பம் என்றுதான் கூற வேண்டும். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன் வாழ்நாள் பணியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது விழத் தொடங்கியிருந்த ‘பயங்கரவாத” சாயத்தை தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்ட வண்ணமிருந்தார். அவருடைய அந்த பணியின் ஆழத்தைத்தான் இன்று நாம் சர்த்தரினதும் பனானினதும் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
விடுதலைப் போராட்டங்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி ‘அழகு” பார்க்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் சர்த்தாரின் மீள் வருகை ஒன்றை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் ஈழச்சூழலின் உச்சத்தில் நிறுத்தப்பட வேண்டிய சர்த்தார், பனான் போன்றவர்கள் தமிழ்த் தேசிய ஊடகப்பரப்பின் தட்டடையான ஒற்றையான வழிநடத்தலினால் மறக்கடிக்கப்பட்டதும் காணாமல் போனதும் துரதிர்ஸ்டவசமானது.
இவர்களின் பரிச்சயம் ஈழச்சூழலுக்கு பழக்கப்பட்டிருந்தால் இன்றுள்ளது போல் தற்போதைய மோசமான களநிலவரங்களை முன்வைத்து ஒரு ஈழத்தமிழன் பிதற்றிக் கொண்டிருக்கமாட்டான். புலிகள் தமது பின்னகர்வினூடாக போராட்டத்தைத் தக்க வைப்பதையும் போராட்ட வடிவத்தை புலிகள் மாற்றிக் கொண்டிருப்பதையும் சுலபமாக இனங்கண்டிருப்பான். தமிழ்த் தேசிய ஊடகங்கள் இனியாவது தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து தமது பன்முகத் தன்மையை கட்டிக்காக்க முன்வரவேண்டும்.
இந்த வரலாற்றுப் பின் புலத்திலிருந்து துதி பாடலாக இல்லாமல், மிகையுணர்ச்சி சார்ந்து இயங்காமல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தோற்றுவாயை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தோற்றுவாயுடன் பொருத்தப்படுவதை ஒரு கட்டத்தில் அவதானிக்கலாம்.
வெற்றியின் விளிம்பில் நின்று ஆரவாரங்களுடன் ஒரு ஆய்வை முன்வைப்பதை விட தற்போதுள்ள இந்த இக்கட்டான சூழலில் ஒரு தேடலை நிகழ்த்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதுதான் உண்மையானதாகவும் இருக்கும்.
இதை எழுதிக்கொண்டிருக்கும் போது மகிந்தவின் படைகள் குமுழமுனை, அலம்பில் தொடங்கி மாங்குளம் கனகராயன்குளம் வரை நீண்டு பரந்தன் வரை ஒரு பிறை வடிவ முற்றுகைக்குள் புலிகளை அடக்கி வைத்திருக்கும் செய்தி வந்து சேர்கிறது. ஒரு வகையில் உண்மையிலேயே இது ஒரு அற்புதமான தருணம். ஏனெனில் ஒரு விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கக்கூடிய இடமும் காலமும் இதுதான்.
போராட்டத்தின் தேவை என்பதே அழிவிலும் துயரத்திலும் இருந்துதான் பிறக்கிறது. எனவே ஒரு போராட்டத்தின் முடிவை- வீழ்ச்சியை ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதனூடாக, அழிவை ஏற்படுத்துவதனூடாக அந்த இனத்தின் துயரத்தை முன்னிறுத்தி வரையறுப்பதை கோமாளித்தனம் என்பதைவிட வேறு வார்த்தைகளில் விபரிக்க முடியவில்லை.
பனானின் மொழியில் கூறினால் ‘இந்த நிலைக்கு அஞ்சத் தேவையில்லை. அடக்குமுறையாளனின் இந்த வழிமுறைகள் வழக்கொழிந்தவை. சில சமயங்களில் அவை விடுதலையைத் தாமதப்படுத்த இயலும், ஆனால் தடுக்க முடியாது.” இதை நாம் எமக்கு தெரிந்த வேறு ஒரு மலினமான சொல்லாடலில் தமிழக நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் குறிப்பிட்டால் ‘சின்னப்புள்ளத்தனமா இல்லை”.
சர்த்தார் இன்னும் அழகாகக் குறிப்பிடுகிறார், ‘தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்ட ஒரு போரில் தங்கள் முழுப் படைபலத்தையும் பிரயோகித்து எதிரி நிலத்தை ஆக்கிரமித்து வெற்றுக்கூச்சலிடுகிறான். இந்த செயல் முழுவதும் வரலாற்றை எழுதப்புகுந்து விட்ட சுதேசிகளின் விடுதலை நிறைவேற்றத்தை தாமதப்படுத்துவதே ஒழிய. முற்றாகத் தடுப்பதல்ல.” எத்தகைய தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.
இந்த தீர்க்கதரிசனங்களை தின்று செரித்து வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம். அதுதான் அவரால் இறுதிவரை ‘பயங்கரவாத” பூச்சாண்டிகளுக்கு அஞ்சாமல் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை உலக அரங்கில் துணிச்சலுடன் முன்மொழிய முடிந்தது. அன்ரன் பாலசிங்கத்தின் வழி ஒவ்வொரு தமிழனும் வரலாற்றினுள் வெடித்தெழுவோம். நமது தாக்குதலால் அவ் வரலாற்றை உலகளாவியதாக மாற்றுவோம். நாம் போராடுவோம். நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் பிரச்சினையில்லை- ஆயுதங்கள் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை – காத்திருக்கும் கத்திகளின் பொறுமை போதும். அன்ரன் பாலசிங்கத்திற்கான நிஜமான அஞ்சலிக்குரிய வார்த்தைகள் அவை. ஏனெனில் சர்த்தார் குறிப்பிடுவது போல் தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்டான் எதிரி.
அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மதியுரைஞர், கோட்பாட்டாளர் என்று நாம் கூறிக்கொண்டாலும் அவர் குறித்து ஒரு தட்டையான வாசிப்பே ஈழத்தமிழ்ச் சூழலில் இருக்கிறது. நாம் அவருடைய தோற்றுவாயை ஆராயத் தவறிவிட்டோம். பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு வந்த அவர் எப்படி ஆயுதம் தரித்த குழுக்களை ஆதரித்து அதன் பின் நின்றார் என்ற யதார்த்த புறநிலையை ஆராயவும் அடையாளங் காணவும் தவறி விட்டோம்.
இத்தவறுகள்தான் இன்றைய போராட்டம் குறித்த தவறான புரிதலுக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட புறநிலைகளின் தோற்றுவாய்களை பிரக்ஞை பூர்வமாக நாம் தேடத் தொடங்கினால் அத் தேடல் எம்மை சர்த்தாரிலும் பனானிலும் கொண்டு போய் நிறுத்தும். ஏனெனில் அவர்களின் தொடர்ச்சியே அன்ரன் பாலசிங்கம்.
அந்த ஆய்வின் தொடர்ச்சி பயங்கரவாதம், புரட்சிகர வன்முறை, வன்முறையின் அறவியல் தொடர்பான கோட்பாடுகளை உய்ந்துணர்ந்து கொள்வதுடன் மட்டுமல்ல தற்போதைய களநிலவரங்களின் கன பரிமாணத்தை உணர்த்துவதுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாய வடிவ மாறுதலையும் இனங் காட்டும்.
அன்ரன் பாலசிங்கம் குறித்து இன்னும் ஒரு தவறான புரிதல் இருக்கிறது. அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் இல்லை என்று நிறுவ முயன்றார் என்பதுதான் அது. இதைத்தான் நாம் தவறு என்கிறோம். ஏனெனில் அவர் அவ்வாறு செய்ய முற்படவில்லை என்பதுதான் உண்மை.
இந்த இடத்தில் மேற்குறிப்பிட்ட கூற்றுக்களை முன்வைத்து ஒரு முக்கியமான விடயம். பாலசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரை முன்வைத்து இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் விடயம் மிகச் சிக்கலானது மட்டுமல்ல நுட்பமானதுமாகும். எமது போராட்டத்தின் மீது தொடர்ச்சியாகத் தடவப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ‘சாயத்தை” கேள்விக்குள்ளாக்குவதுடன் அதிலிருந்து வெளியேறும் நோக்குடனுமே நாம் இது குறித்து தேட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே இந்த சிறு பத்தியினுடாக நாம் தேடும் விடயத்தின் பன்முக பரிமாணத்தை துல்லியமாக – விரிவாக ஆய்வு செய்து உலகத்தின் முன்வைக்க வேண்டிய பெருங்கடமை ஈழத்து அறிவுஜீவிகளின் முன் கிடக்கிறது. வரும் நாட்களில் அப் பணியை சேர்ந்து முன்னெடுப்போம். இப்போது நாம் விடயத்திற்கு வருவோம்.
மேற்கண்ட வரிகளை முன்வைத்து ஒருவர் அப்படியென்றால் ‘புலிகள் என்ன பயங்கரவாதிகளா? பாலசிங்கம் அதை முன்மொழிந்தாரா?” என்று கேட்டு வாதாட முன்வரலாம். இது ஒரு ஒற்றைப் பார்வை. பன்முகக் கோணத்தில் அது உண்மையல்ல. இதன் அடிப்படையில்தான் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் போன பயங்கரவாத கூறுகளை ஒரு அறவியல் வடிவமாக இனங்கண்டு அதை நியாயப்படுத்தினார் – கொண்டாடினார்.
ஏனெனில் நிராயுதபாணிகளாக – நிர்க்கதியாக நின்ற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டது. இதை அவர் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உலகத்துடன் பேச முற்பட்டார். எந்தக் கட்டத்திலும் அவர் இதிலிருந்து இறங்கவேயில்லை.
சர்த்தாரின் மொழியிலேயே எமது ‘பயங்கரவாதத்திற்கு” நாம் வியாக்கியனம் கூறினால், எமது வன்முறை வெறும் கோபக் குமுறல் அல்ல, வன்மத்தின் விளைவுமல்ல, அது எம்மை நாமே திருப்பி படைப்பது. எந்த ஒரு நளினத்தாலும் மேன்மையாலும் சிங்களத்தின் வன்முறையை அழிக்க முடியாது. எமது வன்முறையால் மட்டுமே அதை அழிக்க முடியும். ஆயுதத்தின் முலம் ஆக்கிரமிப்பாளனை நாம் வெளியேற்றுவதன் மூலம் அடக்குமுறை மனநோயிலிருந்து எம்மை குணப்படுத்திக் கொள்கிறோம். எமது கையில் இருக்கும் ஆயுதம் எமது மனிதத்தன்மையின் அடையாளம். ஒரு சிங்கள ஆக்கிரமிப்பாளனை சுட்டு வீழ்த்துவதன் மூலம் ஒடுக்குபவனையும் அவனால் ஒடுக்கப்படுபவனையும் ஒரே சமயத்தில் ஒழித்துக் கட்டுகிறோம். எமது காலடியில் கிடப்பது ஒரு பிணம். ஆனால் அங்கு எழுந்து நிற்பது சுதந்திரமான ஒரு ஈழத்தமிழ் உயிரி.
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் எம்மை பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் நாம் பதில் சொல்கிறோம். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று நாம் வெளிப்படுத்துகிறோம். இப்போது எங்களை பயங்கரவாதிகள் என்கிறீர்கள். எங்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறீர்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் நாம் அதை எமதாக்கிக் கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாம் வன்முறையின் குழந்தைகள்.
அன்ரன் பாலசிங்கம் பேசிய – கொண்டாடிய ‘பயங்கரவாதம்” இதுதான். ஆனால் இந்த அறத்தையும் நீதியையும் தவற விட்டுவிட்டு கேடுகெட்ட சர்வதேச சமூகம் ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைப் போராட்டங்களின் மீது நியாயத் தீர்ப்புக்களை வழங்குவதற்கு முண்டியடிப்பது காலத்தின் விசித்திரம் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. பிரச்சினையின் மூலத்தையும் வேரையும் விட்டுவிட்டு அதற்கு தீர்வை முன்வைக்காமல் ‘பயங்கரவாத” பட்டியலிடும் சர்வதேச்தின் மனச்சாட்சிகளோடு நாம் தொடர்ந்து போராடுவோம். பாலசிங்கத்திற்கான அஞ்சலி அதில்தான் தங்கியுள்ளது. அவர் முன்னெடுத்த பணியும் அதுதான்.
அவர்களின் கதவு இறுகச் சாத்தப்பட்டிருக்கிறது என்பது எமக்குத் தெரியும். அவர்கள் திறக்கவில்லை என்பதற்காக நாம் தட்டுவதை நிறுத்த வேண்டாம். நாம் தொடர்ந்து தட்டுவோம். என்றாவது ஒரு நாள் அது திறந்தே தீரும்.
வன்னியில் நிலங்களை ஆக்கிரமித்து மண்ணின் மைந்தர்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து சொத்துக்களை சூறையாடி பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கி விட்டிருக்கிறது சிங்கள இனவாதம். தொண்டு நிறுவனங்களும் இல்லை. துயர் துடைக்க நாதி இல்லை. விச ஜந்துக்களோடு காட்டில் காலம் கழிகிறது. போதாததற்கு இயற்கையின் சீற்றம் வேறு. எறிகணைகளும் குண்டு வீச்சு விமானங்களும்தான் தினமும் துயிலெழுப்புகின்றன. போததற்கு ‘கிளஸ்ரர்” குண்டுகளை வேறு சிங்களம் வீசத் தொடங்கியிருக்கிறது. உலகம் கண்ணை மூடிப் பாhத்துக் கொண்டிருக்கிறது. இது ‘பயங்கரவாதம்” இல்லையாம்.
‘அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் முன்பு கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை அன்று நாம் வெளிப்படுத்தினோம். எம்மை ‘பயங்கரவாதிகள்” என்றீர்கள். இப்போது அதனிலும் பன்மடங்காக எதிரி எமக்கு கற்பிக்கிறான். இதை ஏன் உங்களால் கண்டு கொள்ள முடியவில்லை. அது ‘பயங்கரவாதம்” இல்லையா!” ஈழத்திலிருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிலிருந்தும் எழும் குரல் இது.
எல்லா சமன்பாடுகளையும் கலைத்துப் போட்டு எதிரியானவன் விளையாடிக்கொண்டிருக்கிறான்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து அத்தாக்குதலை முன்னிறுத்தி பிரபல பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்திரியா “டந அழனெந” பத்திரிகையில் ஒரு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அதில் ‘ஒரு அதிகார அரசும் ஒரு அமைப்பும் நடத்திய விளையாட்டில் மறு தரப்புக்கு சீட்டுக்களை சரியாகப் பகிர்ந்தளிக்காமல் அதிகார அரசு விளையாட்டை ஆரம்பித்தது. விளைவு மறு தரப்பு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்கு தள்ளப்பட்டது. விளைவு இரட்டைக் கோபுரம் தகர்ந்தது. மாற்றப்பபட்ட அவ் விதிகள் கொடுரமானவை. ஏனெனில் அவை இறுதியானவை என்பதால்” என்று குறிப்பிட்டார். இன்றும் சிங்களம் இதைத்தான் நமக்கு எதிராகச் செய்கிறது.
இப்போது தமிழீழத்திலும் விளையாட்டின் விதிகள் மாற்றப்படவேண்டிய புறநிலை உருவாகியிருக்கிறது. அன்ரன் பாலசிங்கம் இருந்திருந்தால் தெளிவாகச் சொல்லியிருப்பார். இது வன்முறையின் மூன்றாம் கட்;டம். தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதிலிருந்து ‘கிளஸ்ரர்” குண்டுகள் வரை உலகின் மௌனம் தொடர்கிறது. இன்று நிராயுதபாணிகளாக – நிர்க்கதியாக நின்கிற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. மிஞ்சி இருப்பது உயிர் மட்டுமே. நாளை அவையே அவர்களுக்கு ஆயுதம். அவர்களது உயிர்கள் ஆயுதங்களாக வெடிக்கும் போது மட்டும் உலகின் யோக்கியர்கள் ‘பயங்கரவாத பட்டியலை” காவிக்கொண்டு ஓடி வரலாம். அதற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது. இது சிங்கள ஏகாதிபத்தியயம் வீசிய வளைதடி. அதை நோக்கி திரும்பும் காலம் நெருங்குகிறது. அன்ரன் பாலசிங்கத்தின் இன்றைய நினைவு நாளில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அதைச் சாத்தியமாக்குவோம். இதுதான் அவருக்கான அஞ்சலி மட்டுமல்ல ஒவ்வொரு தமிழனின் வரலாற்றுக் கடமையும் கூட.
தமிழகத்திலும் கிளிநொச்சி: விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக மக்களின் உணர்வுபூர்வமான ஆதரவு
தமிழகத்தின் ஒரு கிராமத்திற்கு கிளிநொச்சி என்று பெயர் சூட்டி தமிழக மக்கள் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கான தமது தார்மீக ஆதரவை வெளிக்காட்டியுள்ளனர்.
பிரஸ்தாப கிராமம் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளது. அதன் முன்னைய பெயர் எடுமலைக் கிராமம் என்பதாகும். அங்குள்ள மக்கள் தீவிரமான தமிழ் உணர்வாளர்கள். ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் அவதானித்து வருபவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த 27ம் திகதியும் அக்கிராமத்தவர்கள் ஒன்றுதிரண்டு மணச்சநல்லூர் பகுதியின் நாம் தமிழர் இயக்க நிர்வாகி புகழேந்தி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம்பரிதி ஆகியோரின் தலைமையில் மாவீரர் நாளை அனுட்டித்துள்ளார்கள்.
அதன் பின்பே ஈழத்தமிழர்கள் மீதான தமது அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்கள் தமது கிராமத்திற்கு கிளிநொச்சி என்று பெயரிட்டு, பெயர்ப்பலகையும் வைத்துள்ளார்கள்.இதற்கிடையே தமிழகத்தில் ஒரு கிராமத்தின் பெயரை திடீரென கிளிநொச்சி என மாற்றியது குறித்து பொலிசார் திகைப்படைந்துள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட இசைப்பிரியா, இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறுகின்றது -சனல்4 தொலைக்காட்சி
சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் தாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளதாக, முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் ஆய்வுதவியுடன் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இரவு 7:00 மணிச் செய்தியறிக்கையில் 8 நிமிடங்கள்வரை ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி, கடந்த வாரமும், அதற்கு முன்னரும் தாம் வெளியிட்ட காணொளிக் காட்சிகள் போர்க்குற்ற ஆதாரங்களாக அமையும் எனவும் கூறியிருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் கடந்த வாரம் தாம் வெளியிட்ட காணொளியில் உள்ள இசைப்பிரியா என அழைக்கப்படும் (கொல்லப்பட்டபோது) 27 அகவுடைய சோபாவும் உள்ளடங்குவதாகவும், அதனை அவரது தோழிகளில் (9 வருடங்கள்) ஒருவரும், முன்னாள் போராளியும், தற்பொழுது லண்டனில் வசித்துவரும் கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதையும் கல்பனாவின் முகம் மறைக்கப்பட்ட செவ்வியுடன் இந்தத் தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.
பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் இவ்வாறான காணொளிச் சாட்சிகளை சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், கடந்த பல மாதங்களிற்கு முன்னர் தாம் வெளியிட்ட இளைஞர்கள் வரிசையாகச் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்ரன் ஆய்வு செய்து, அது உண்மையான காணொளி எனக் கூறியிருந்ததையும் இந்தத் தொலைக்காட்சி அடிக்கடி நினைவூட்டுவதுடன், ஏனைய பல சட்ட மற்றும் போர்க்குற்ற வல்லுனர்களின் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.
இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகம், மற்றும் தொடர்பாடல் பிரிவில் பணியாற்றிய ஒரு முக்கிய போராளி எனவும், இவர் போரிடும் படைப் பிரிவை சார்ந்தவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சி, அதற்கு அவரது நண்பியான நேரடிச்சாட்சி கல்பனாவின் கருத்துப் பகிர்வையும் அளித்திருக்கின்றது.
இதேவேளை, லெப்ரினன்ட் கேணல் தரத்திலுள்ள இசைப்பிரியா என்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53வது படையணியினால் கடந்த மே மாதம் 18ஆம் நாள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவர் நேரடிச் சண்டையிலே தம்மால் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த மே மாதம் செய்தி வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்தியாளர் ஜொனதன் மில்லர், அவ்வாறு போரிடும்போது கொல்லப்பட்டிருந்தால், ஏன் இசைப்பிரியாவின் கைகள் பின்புறம் கட்டப்படுள்ளது எனவும், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடலம் காணப்படுவதையும் குறிப்பிடுகின்றார்.
இருதய நோய் காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு இணங்க இசைப்பிரியா போரிற்கு செல்வதில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் பணியாற்றியவர் எனவும், ஊடகவியலாளரான இவர் நடனம், நாடகம், பாட்டு போன்ற பல்துறை வல்லுனர் எனவும் அவரது நண்பியை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இசைப்பிரியா தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த காணொளிக் காட்சியையும் ஒளிபரப்பியுள்ள சனல்-4, அவர் கரும்புலிகள் பற்றிய பாடலுக்கு நடிக்கும் காட்சியையும் தனது செய்தியறிக்கையில் இணைத்துள்ளது.
கடந்த வாரம் காணொளி வெளியிடப்பட்டது போன்று இவ்வாரமும் முன்னணி போர்க்குற்ற சட்ட வல்லுனரின் கருத்தைப் பதிவு செய்துள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, மெட்றிக் சம்பேர்ஸ் எனப்படும் அமைப்பின் போர்க்குற்ற சட்ட வல்லுனர் ஜீலியன் நொவெல்ஸிற்கு இந்தக் காணொளிகளைக் காண்பித்தபோது, அவை மிக முக்கிய போர்க்குற்ற ஆதாரங்கள் எனவும், இந்தப் போர்க் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியதையும் ஒளிபரப்பி இருக்கின்றது.
போராளியான இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இவர்களது 6 மாதக் குழந்தையையும் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பறிகொடுத்திருந்த நிலையில், இசைப்பிரியாவை சிறீலங்கா படையினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மிகக்கொடுரமாகப் படுகொலை செய்திருப்பதாக நம்பப்படுகின்றது.