Saturday, April 2, 2011

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடனும், பாதுகாப்புடனும் இருக்கிறார் என்றும், வெகுவிரைவில் அவர் மக்கள் முன்தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார் என்றும் விடுதலைப் புலிகளின் புதிய இணைய தளம் www.lttepress.com தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் விடுதலைப்புலிகள் முற்றிலு மாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்த பிறகு, விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வ இணையதளங்கள் காணாமல் போயின. அதன் பிறகு விடுதலைப் புலிகளுக்கென்று அதிகாரப்பூர்வமாக இணையதளம் இல்லாமல் இருந்தது. தற்போது எல்டிடிஈ பிரஸ்.காம் என்ற புதிய இணைய தளம் உருவாக்கப் பட்டு, விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இணைய தளத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் செய்தி தொடர்பாளர் ச.தமிழ்மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு,
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மிகுந்த நலமுடனும், பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.
சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புகளை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.
இழப்புகள் என்பது எமக்கும், எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல. சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன், எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

Friday, April 1, 2011

மீண்டும் புலிகள் தாக்குதல்: இலங்கை ராணுவத்தினர் 4 பேர் பலி?

இலங்கை கப்பற்படைக்கு சொந்தமான படகு ஒன்று முல்லைத்தீவின் சாலை கடற்படை முகாமிலிருந்து சுண்டிக்குளம் முகாம் நோக்கி சென்றது. அதில் கடற்படை வீரர்கள் 4 பேரும், ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். ஆயுதங்களுடன் சென்ற அவர்கள் திடீரென மாயமானார்கள்.

இவர்கள் மாயமானது வள்ளம் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்த படகு, கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வீரர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இலங்கை கடற்படைக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ் தேசிய எழுச்சி படை என்கிற பெயரில் இயங்கும் புலிப்படை பிரிவு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்செய்தி இலங்கை அரசுக்கு மிகப்பெரிய அபாய எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கலங்கிபோன இலங்கை ராஜபக்சே அரசு, இறந்துபோனவர்களின் உடலை தேடும் பணிக்கு உதவி செய்யுமாறு இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரம் ஹபரணைக் காட்டுப்பகுதியில் திடீர் தாக்குதல் நடைபெற்றது. அதில் இலங்கை ராணுவத்தின் 2 கட்டளை அதிகாரி, ஒரு கேப்டன், 2 மேஜர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு தமிழ் தேசிய எழுச்சி படை பொறுப்பேற்றதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

அனுமதியின்றி வைத்த பேனரை அகற்றிய அதிகாரிகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக, நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

சிவகங்கையில் இந்திய கம்யூ., வேட்பாளரை ஆதரித்து நேற்று, அவர் பேசினார். மேடையில் இருந்த பேனருக்கு, அனுமதி பெறாததால், அதை அகற்ற டி.எஸ்.பி., இளங்கோ உத்தரவிட்டார். பேனர், கட்சி கொடிகளை போலீசார் முன்னிலையில் அலுவலர்கள் அகற்றினர்.

இதற்கு சீமான், மாவட்ட அமைப்பாளர் தீனதயாளன், நிர்வாகிகள் அன்வர்ராஜா, சோமசுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தனர்வி.ஏ.ஓ., கோபிநாத் புகாரின்படி, 143 (கூட்டம் கூடியது); 188 (அனுமதியின்றி கொடி, பேனர் கட்டுதல்); 353 (அரசு பணியை தடுத்தல்); 506(1)(கொலை மிரட்டல்) பிரிவுகளின் கீழ், இன்ஸ்பெக்டர் சங்கர், எஸ்.ஐ., வடிவேல்முருகன் வழக்கு பதிந்தனர்.

Wednesday, March 30, 2011

வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை! – சோ

தனது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததில் எந்தத் தவறும் இல்லை. மக்களைப் பொறுத்தவரை இது ஒரு மேட்டரே இல்லைஇ என்று கூறியுள்ளார் அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான சோ.

தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனைஇ மக்கள் முன்னிலையில் சரமாரியாக விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக விஜயகாந்துக்கெதிரான கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் பல கட்சித் தலைவர்களும். ஆனால் விஜயகாந்தோ என் ஆளைத்தானே அடிச்சேன். உங்களுக்கென்ன வந்தது… என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாய் வருவான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால் சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.

இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில் “எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா… அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே… இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க” என்றார்.

இதைக் கேட்ட திமுக கூட்டணியினர் ‘இதே தவறை திமுக தலைவர்கள் யாராவது செய்திருந்தால் சோ இதே கருத்தைத்தான் சொல்லியிருப்பாரா?’ என்று திருப்பிக் கேட்கின்றனர். கேள்வி நியாயம்தானே!

வரலாறு காணாத வினோதம் – அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம்.

காஞ்சிபுரத்தில் எதிரணியில் உள்ள அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்., வேட்பாளராக யசோதா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், எதிரணியில் உள்ள அ.தி.மு.க., மாவட்டச் செயலாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நேற்று ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பெருமாளை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்த ஒரு கொள்கை நிலைப்பாடும் கொண்ட கட்சி அல்ல காங்கிரஸ் கட்சி என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Tuesday, March 29, 2011

இலங்கை அகதிகளுக்கு நிபந்தனையின்றி வேலை வழங்கலாம்: சென்னை போலீஸ் எஸ்பி சாரங்கன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிகளுக்கு ஆட்தேர்வு செய்யலாம் என தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி சாரங்கன் கூறினார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மப்பேடு, காக்களூர், சிப்காட் பகுதிகளில் உள்ள 52 தொழிற்சாலையின் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

இதில் தொழிற்சாலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இரவு நேரங்களில் தொழிற்சாலைப் பகுதிகளில் காவலாளிகளை தாக்கிவிட்டு கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படையும், இரவு நேர ரோந்துப் பணியும் தீவீரப்படுத்தப்படும் என எஸ்பி சாரங்கன் கூறினார்.

மேலும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இம் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் இருக்கும் அகதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாமா? என கேட்டனர்.

அதற்கு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு முறையாக உள்ள அகதிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி வேலை வாய்ப்பு அளிக்கலாம் என எஸ்பி சாரங்கன் கூறினார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் டிஎஸ்பி முருகேசன், பொன்னேரி, தனிப்பிரிவு எஸ்ஐக்கள் ஆனந்தன், செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Monday, March 28, 2011

[தரவிறக்க இணைப்பு] நாம் தமிழர் 2011 சட்டமன்ற தேர்தல் பரப்புரை பாடல்கள்

நாம் தமிழர் 2011 சட்டமன்ற தேர்தல் பரப்புரை பாடல்கள் மற்றும் நாம் தமிழர் கொடி பாடல்

கீழுள்ள இணைப்பை Right click செய்து Save link as இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கம் செய்யவும்.

பரப்புரை பாடல் 1

பரப்புரை பாடல் 2

பரப்புரை பாடல் 3

பரப்புரை பாடல் 3

பரப்புரை பாடல் 5

நாம் தமிழர் கொடி பாடல்

ebook