Monday, March 21, 2011

ஓர் அரசு தனது சொந்த மக்களை விமாத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம் !

ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி தனது சொந்த மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார். அனைத்துக் குற்றங்களுக்கும் அவரே பொறுப்பு என்றும் கோடிட்டுள்ளார். இதனுடைய கருத்து கடாபி அனைத்து குற்றங்களையும் ஏற்று சதாம்உசேன் போல சர்வதேச நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் இன்னொரு விடயத்தையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தனது சொந்த நாட்டு மக்களின் மீது போர் விமானத்தை பாவிப்பதும் போர்க்குற்றமே என்ற செய்தியையும் தெளிவாகக் கோடுபோட்டுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சர் இத்தாக்குதல் பற்றிக் கூறும்போது இது தருணம், இது தேவை, இது கட்டாயம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். தற்போது ஐ.நாவை சரியான பாதையில் வளைத்து ஓர் உலக ஜனநாயக அணி வீறு கொண்டுள்ளது. இந்த அணி ஈழத்தமிழினத்திற்கு புதிய விடிவை வரைவு செய்யும் இலக்குவரை போகும் என்பது தமிழ் மக்கள் அறிய வேண்டிய விடயமாகும். சிறீலங்கா அரசு நாகர்கோயில் மகாவித்தியாலயத்தில் வீசிய விமானத்தாக்குதல் சர்வதேச போர்க் குற்றத்திற்குள் வருவதை இத்தருணம் உணர்த்தி நிற்கிறது. ஈழத் தமிழர் தமக்கான உரிமையை தெளிவாக வரையறை செய்து வெளிவர சிறந்த முன்னுதாரங்கள் தற்போது சர்வதேச அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

ebook