பெற்ற தாயை கவனிக்க கடமைப்பட்ட ஆண் பிள்ளைகள் தாயை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். அதனால் தாய் தனது மகளை சார்ந்து மகளின் தயவில் வாழும் நிலை ஏற்பட்டால்…(ஏற்பட்டிருக்கின்றது.)
வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது…(ஆகியிருக்கின்றார்கள்).
குடிசைகள் திடீர் திடீரென்று கோபுரமாக மாறினால்…(மாறியிருக்கின்றது)
உலகில் விபச்சாரமும் மதுவும் பெருகினால்…
தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதும் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் …(நடக்கின்றது)
பாலைவனங்கள் சோலையானால்…(ஆம்)
காலம் சுருங்கிவிடும் (முஹமது நபிகளார் தான் வாழ்ந்த காலத்தை உதாரணமாக சொல்லும் போது அதாவது இன்றைக்கு 1432 வருடத்திற்கு முன்பு “(இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். இன்றைய ஒருநாள் அன்று ஒருமணிநேரம் போல ஆகிவிடும். ஒரு மணி என்பது ஒரு வினாடி போன்று ஆகும்..(நடக்கிறது)
கொலைகள் அதிகரிப்பதுவும்…(ஆம்)
நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தால்…
மனிதர்கள் பள்ளிவாசல்களை காட்டி என்னுடையது பெரிதா உன்னுடையது பெரிதா என்று சொல்லி பெருமையடிப்பது….(உண்மைதான்)
கடைகள் பெருகுவது….(பெருகி விட்டது)
பெண்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகரித்தல்..
ஆடை அணிந்தும் நிர்வாணமாக தோற்றமளிக்கும் பெண்கள் உலகத்தில் தோன்றுவது…(உண்மைதானே)
பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டுவது(அரசியல்வாதிகள் போன்றோர்) (திரட்டுகின்றார்கள்)
தற்கொலை அதிகரித்தல்..(அதிகரித்திருக்கின்றது)
தான் தான் இறைதூதர் என்றும் நபி என்றும் பொய் சொல்பவர்கள் அதிகரித்தல்….(மிக அதிகரித்து விட்டார்கள்)
No comments:
Post a Comment