பெர்த்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி, பந்தை சேதம் செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு 2 இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார்.
போட்டியின் நடுவில் இரண்டு முறை பந்தை சேதம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தொலைக்காட்சி நடுவர் கள நடுவருக்குத் தெரியப்படுத்தினார்.
ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகள்ளே நடத்திய விசாரணையில் அவர் மன்னிப்பு கேட்டதாகவும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் தவறு செய்ததை ஒப்புக் கொண்ட ஷாகித் அஃப்ரீடி, எல்லா அணிகளூம் பந்தை சேதம் செய்வதாகக் கூறி மேலும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.
எல்லா அணிகளும் செய்தால் அது நியாயமாகிவிடுமா என்ற ரீதியில் அவர் சிந்திக்கவில்லை, மேலும் பாகிஸ்தானைத் தவிர எந்த அணியும் பந்து சேத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பதையும் அஃப்ரீடி சௌகரியமாக மறந்துள்ளார்.
No comments:
Post a Comment