மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியா தோற்கடித்தது.
20 ஓவர் உலககோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியா - வங்க தேசம் அணிகள் மோதின.
பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ட்ரேலிய அணி 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹஸ்ஸி 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய வங்கதேசம் அணி 18.4 ஓவரில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்ட்ரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
No comments:
Post a Comment