இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இனி மேல் இருக்கும்-இசைக்கப்படும். இதற்கான தீர்மானத்தை கடந்த புதன்கிழமை அமைச்சரவை எடுத்துள்ளது.
இதன்படி தேசிய கீதம் தமிழில் இனி மேல் அரச வைபவங்கள் எவற்றிலும் இசைக்கப்பட மாட்டாது.தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தான் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றது.
பிரிட்டனுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையில் கடந்த வாரம் திரும்பி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.
"எந்த ஒரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் இல்லை. ஒரு நாட்டில் இரு மொழிகளில் தேசிய கீதம் இருக்க முடியாது. நாம் எல்லோரும் இலங்கை ஒரே ஒரு நாடுதான் என்பதை மனதில்எப்போதும் கட்டாயமாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்து இருக்கின்றார்.
ஜனாதிபதியின் இந்த யோசனையை வீடமைப்பு மற்றும் நிர்மாண துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ வெகுவாக ஆதரித்தார். ." அயல் நாடான இந்தியாவில் 300 இற்கும் அதிகமான மொழிகள் இருக்கின்றன.
ஆனால் இந்தி மொழியில்தான் தேசிய கீதம் உள்ளது. " இவ்வாறு அமைச்சர் வீரவன்ஸ தெரிவித்தார். ஆனால் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார ஜனாதிபதியின் யோசனை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்து இருக்கின்றார்.
இதே நிலைப்பாட்டைதான் அமைச்சர் ராஜித செனவிரட்ணவும் வெளிப்படுத்தினார். எனினும் தேசிய கீதம் இனி மேல் சிங்களத்தில்தான் இனி மேல் இருக்கும்-இசைக்கப்படும் என்கிற தீர்மானத்தை அமைச்சரவை எடுத்தது.
சிங்கள மொழியில் மாத்திரம்தான் இனி மேல் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்கிற இத்தீர்மானம் பொது நிவாக அமைச்சின் ஊடாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரச அலுவலகங்கள், திணைக்களங்கள் போன்றவற்றுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பு - இலங்கையின் வீடமைப்பு மற்றும் நிர்மாண துறை அமைச்சர் விமல் வீரவன்சவின் அறிவுக் கூர்மை : இந்தியாவின் தேசிய கீதம் இந்திய மொழிகளில் ஒன்றான பெங்காலி மொழியில் தான் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment