Wednesday, February 23, 2011

பார்வதி அம்மாளின் சிதையின் மீது நாய்களைப் போட்டுக் கொழுத்தியது காட்டுமிராண்டி இனவாதிகளின் இராணுவம்!

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயாரின் சிதையின் மேல் நாய்களைப் போட்டுக் கொழுத்திய மிகக் கீழத்தரமான செயற்பாட்டில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர்.  வல்வெட்டித்துறை ஊரணியில் உள்ள இந்து மயானத்தில் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் புகழுடல் நேற்றைய நாள் தகனம் செய்யப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்று காலை அவரது சிதையில் இருந்து அஸ்தி எடுப்பதற்காக அவரது உறவினர்கள் சென்றிருக்கின்றனர்.

அவ்வேளை சிதையின் மீது மூன்று நாய்களின் எலும்புக்கூடுகள் எரிந்த நிலையில் அரைகுறையாகக் காணப்பட்டுள்ளன, அதேவேளை பார்வதி அம்மாளின் அஸ்தியும் அங்கிருந்து எடுத்து சிதறிய நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் சரிதம் விசேட செய்தியாளரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை அரசும் இராணுவமும் இன்னமும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டில் இருந்து விடுபடவில்லை என்று வல்வெட்டித்துறை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

ebook