Tuesday, February 22, 2011

தமிழ்ச்செல்வன் சிலை விவகாரத்தில் இலங்கை இனி எதிர்ப்புத் தெரிவிக்காது

தமிழ்ச்செல்வனுக்கு பிரான்சில் சிலை வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இனி எதிர்ப்புத் தெரிவிக்க முயலாது என்று பிரான்சிற்கான இலங்கையின் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
ஆயினும் லா கோர்னேவ் நகரில் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்துள்ள விடயம் குறித்து இராஜதந்திர ரீதியில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பிரான்சின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு மதிப்பளித்து இதற்கு மேல் விடயத்தைப் பெரிதுபடுத்தப் போவதில்லை என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலாக பிரான்சுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
சிலை வைப்பது தொடர்பாக பிரான்சில் காணப்படும் சட்டதிட்டங்களை மாற்றிக் கொள்ளக் கோருவதில் அர்த்தமில்லை  என்றும் அதற்குப்பதிலாக இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவதே மேலானது என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
சிலை வைப்பு விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்த ஒரு சிலா் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

ebook