”தானத்தில் சிறந்தது ரத்த தானம்” என்பார்கள். அந்த ரத்த தானத்தை வாழ்வின் லட்சியமாகவே நிறைவேற்றி வருகிறார்கள் மதுரை வரதராஜன் – அமுதுரஜினி தம்பதி. ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு, வரதராஜன் மட்டும் இதுவரை 72 முறை ரத்தம் வழங்கியுள்ளார்.
தனது துணைவியாரையும் ரத்தம் வழங்க வைத்து ஏழை நோயாளிகளின் உயிர் பிழைக்க உதவி வருகிறார். இத்தனைக்கும் வரதராஜனுக்கு “ஏ’ நெகட்டிவ் எனும் அரியவகை ரத்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சேவையைப் பாராட்டி, “நெஞ்சம் கலந்த நேயர்’ உள்ளிட்ட பல விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ரத்த தானச் சேவையுடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் மூலம் மாதந்தோறும் இலக்கியக் கூட்டம் என இதுவரை ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளையும் நடத்திவரும் அந்தத் தம்பதியரை மதுரை மேலமாசி வீதியில் உள்ள மணியம்மை மழலையர் பள்ளியில் சந்தித்துப் பேசினோம்.
எப்போதிருந்து ரத்த தானம், இலக்கிய சேவையில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
மழலையர் பள்ளியைக் கடந்த 25 ஆண்டுகளாக நடத்திவருகிறேன். நான் சாதி மறுப்பு திருமணம் செய்தவன். சமூகச் சீர்திருத்தத்தை மனதில் வைத்து சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுவருகிறேன். எனினும், தமிழ் மொழிக்கும், அதன் இலக்கியத்துக்கும் அயராது பாடுபடவேண்டும் என மாதந்தோறும் இலக்கியக் கூட்டத்தையும் நடத்திவருகிறேன். தமிழண்ணல், இளங்குமரனார் என தமிழ் அறிஞர்கள் துணையோடு தமிழ் இலக்கியத்தை இளந்தலைமுறையினருக்கு கொண்டுசெல்வதே எனது கூட்டத்தின் நோக்கம்.
இதற்கிடையில்தான் ஏழை எளியோருக்கு ரத்த தானம் வழங்கிவருகிறேன். அதாவது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு மட்டும்தான் ரத்தம் வழங்குவது என்ற குறிக்கோளுடன் இதுவரை 72 முறை ரத்தம் வழங்கியுள்ளேன்.
எப்போது ரத்தம் வழங்க ஆரம்பித்தீர்கள்? உங்கள் துணைவியாரையும் இதில் ஈடுபடுத்தியது எப்படி?
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நான் எனது பிறந்த நாளுக்காக பிறருக்கு என்னால் ஆன உதவியைச் செய்ய நினைத்திருந்தேன். அப்போது அரசு மருத்துவமனையில் ஏழை குழந்தை சிகிச்சைக்கு அரியவகை ரத்தமான ஏ நெகட்டிவ் தேவைப்படுவதாக அறிந்து முதலில் வழங்கினேன். பின்னர், நோயாளிகளுக்குத் தேவைப்படும்போதெல்லாம் ரத்தம் வழங்கலாமே என நானும் துணைவியாரும் பேசினோம். அதனடிப்படையில்தான் பெரியார் குருதிக் கழகம் அமைத்து ஆண்டுக்கு சுமார் 600 பேரையாவது ரத்தம் வழங்க வைக்கிறோம்.
எங்களது ரத்த தானக் கழகம் மூலம் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே ரத்தம் வழங்கிவருகிறோம். ஆனால், சில நேரம் தவிர்க்கமுடியாத காரணங்களால் தனியார் மருத்துவமனைகளும் எங்களிடம் ரத்தம் கேட்பதால், நோயாளிகள் நலன் கருதி இலவசமாகவே அவர்களுக்கும் ரத்தம் வழங்குகிறோம்.
நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள். எனது துணைவியார் அமுதுரஜினியும் அவ்வப்போது ரத்தம் வழங்கிவருகிறார். அதிக முறை ரத்தம் வழங்கியதற்காகவும், அதிகமானோரை ரத்தம் வழங்கச் செய்தமைக்காகவும் மதுரை மாவட்ட அளவில் சிறந்த ரத்த தான தொண்டருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரத்த தானம் தவிர வேறு என்ன சேவையில் ஈடுபடுகிறீர்கள்?
குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஆகவே குழந்தைகளுக்கான ஹீமோகுளோபின் அளவைக் கண்டறியும் மருத்துவ முகாம் ஆங்காங்கே நடத்தப்படுகிறது. அப்படி ஹீமோகுளோபின் குறைந்திருக்கும் குழந்தைகளுக்கு அதைச் சரிசெய்யும் மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறோம். நாங்கள் நடத்தும் மணியம்மை மழலையர் பள்ளியில் சிறுவர், சிறுமியருக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கற்றுத் தருகிறோம். மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளுக்கு இலவசமாகவே கல்வி கற்றுத் தரப்படுகிறது.
எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் திண்ணைப் பள்ளிக்கூட ஒழுக்கத்தையும், இருபத்தோராம் நூற்றாண்டு கல்வி அறிவையும் பெறும் வகையில்தான் கற்பிக்கப்படுகிறது. மேலும், இசை பயிற்சி முகாமையும் கோடை விடுமுறை நாள்களில் நடத்திவருகிறோம். அதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு சான்றிதழைப் பெற்றுவருகிறார்கள்.
நீங்கள் பெரியார் கொள்கையில் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தும் பக்தி இலக்கியக் கூட்டங்களை அதிகம் நடத்துகிறீர்களே?
தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் முக்கியமானவை. நாட்டில் மனச்சாட்சியும், நம்பிக்கையும் முக்கியம். அப்படிப் பார்த்தால் எங்கள் ஊர் கோயில் நகைகளை எனது பொறுப்பில் வைப்பதைத்தான் எங்கள் பகுதி மக்கள் விரும்புகிறார்கள். பெரியார் பிறந்த தினத்துக்குக்கூட நான் பெரியபுராண வரிகளை வைத்தே வாழ்த்தி போஸ்டர் ஒட்டுகிறேன். தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் இளந்தலைமுறையினரின் பங்கு மிகவும் குறைந்துவருகிறது. அதற்காகவே மாதந்தோறும் இலக்கியக் கூட்டத்தையும் நடத்திவருகிறேன்.
கட்டுப்பாடு, ஒழுக்கம், மனிதநேய அதனடிப்படையில் கற்பிக்கப்படும் கல்வியே சமூகத்துக்கு நன்மை பயக்கும். இதை மையமாக வைத்தே ரத்த தானம், கல்வி நிலையம், இலக்கியக் கூட்டங்களை துணைவியாரோடு சேர்ந்து நடத்திவருகிறேன். இன்னும் சொல்லப்போனால் மக்கள் சேவைக்கு, இல்லறத்தால் இடையூறு ஏற்படக்கூடாது என்ற நோக்கில், குழந்தைகூட பெற்றுக் கொள்ளாமலேயே நானும் எனது துணைவியாரும் பொதுப்பணியில் ஈடுபட்டுவருகிறோம்.

No comments:
Post a Comment