87 வயதாகிவிட்டவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராகுல்காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கொச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசும்போது, ‘’சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?
காங்கிரஸுக்கு வாக்களித்தால், இளைஞர்களும், அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் மிக்கவர்களும் சமஅளவில் சட்டப் பேரவைக்குச் செல்வர். இளமைக்கு உரிய துடிப்புடனும், அனுவத்துக்கு ஏற்ற விவேகத்துடனும் ஆட்சி நடைபெறும்.
கேரள அரசியலில் இப்போது வன்முறை அதிகரித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கு முடிவு கட்டப்படும். கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்தான் வன்முறை அதிகரித்துள்ளது.
காந்திய வழியில் வந்த காங்கிரசார் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். எனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர மக்கள் வாக்களிக்க வேண்டும்’’என்று ராகுல் காந்தி பேசினார்.
No comments:
Post a Comment