தாம் இலங்கை மீனவர்களுக்கு காட்டுகின்ற கரிசனையை, இந்திய மீனவர் மீது இலங்கை கடற்படையினர் காட்டுவதில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தாக்கப்பட்டு வருகின்ற சம்பவங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து வரும் மீனவர்கள் இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடிக்கும் போது, அவர்களை இந்திய அதிகாரிகள் மன்னித்து விடுகின்றனர்.
எனினும் இலங்கை கடற்படையினர் அவ்வாறு செய்வதில்லை எனவும், அவர்கள் தமிழக மீனவர்களை தாக்கி வருவதே வாடிக்கையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக வேதராணியம் மற்றம் கன்னியாகுமரி மாவட்டங்களின் மீனவர்களே அதிகமாக தாக்குதல் சம்பவங்களுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த சம்பவங்களை இந்திய அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment